“ஜி.டி.என் பயோபிக்கில் பெரியார், எம்.ஆர்.ராதா, என்.எஸ். கிருஷ்ணன்..!” - இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் பேட்டி

இயக்​குநர் கிருஷ்ணகு​மார் ராம்​கு​மார்

இயக்​குநர் கிருஷ்ணகு​மார் ராம்​கு​மார்

Updated on
2 min read

‘இந்​தி​யா​வின் எடிசன்’ என்று அழைக்​கப்​படும் ஜி.டி.​நா​யுடு​வின் பயோபிக்​கான ‘ஜி.டி.என்’ ஆக.7-ல் வெளி​யாக இருக்​கிறது. ஜி.டி.​நா​யுடு கதா​பாத்​திரத்​தில் மாதவன் நடித்​திருக்​கிறார். நடிகர் ‘பைவ் ஸ்டார்’ கிருஷ்ணா என்​கிற கிருஷ்ணகு​மார் ராம்​கு​மார் இயக்கி இருக்​கிறார்.

‘ராக்​கெட்​ரி’ படத்​தைத் தயாரித்த வர்​கீஸ் மூலன் பிக்​சர்ஸ் சார்​பில் விஜய் மூலன், வர்​கீஸ் மூலன் மற்​றும் ட்ரைகலர் பிலிம்ஸ் சார்​பில் ஆர்​.​மாதவன், சரிதா மாதவன் இணைந்து தயாரித்​துள்ள இந்​தப்​படம் பற்றி இயக்​குநர் கிருஷ்ணகு​மார் ராம்​கு​மாரிடம் பேசினோம்.

ஜி.டி.​நா​யுடு பயோபிக் பண்​ணணும்னு எப்​படி தோணுச்​சு?

“ஸ்கூல்ல அவரை பற்றி பாடப்​புத்​தகத்​துல படிக்​கும்​போதே அவர் மேல ஈர்ப்பு இருந்​தது. அப்​புறம் அடுத்​தடுத்த கால​கட்​டங்​கள்ல அதை மறந்​தாச்​சு. சில வருடங்​களுக்கு முன்​னால அவரை பற்​றிய புத்​தகத்தை வாங்கி படிச்ச பிறகு​தான், இவரோட பயோபிக்கை கண்​டிப்பா பண்​ணணும்னு தோணுச்​சு.

ஏன்​னா, அவர் வாழ்க்கையில அவ்​வளவு விஷ​யங்​கள் நடந்​திருக்​கு. அவரைப் பற்றி கேள்​விப்​ப​டாத விஷ​யங்​கள் நிறைய இருந்​தது. அவர் கண்​டு​பிடிப்​பு​களை விட, அவர் நோக்​கங்​கள் உயர்ந்​தவை. அவர் தமிழ்​நாட்​டோட பெரு​மை. இந்​தி​யா​வோட பெரு​மை. ஆட்டோமொபைல் துறை​யில அவர் சாதித்த விஷ​யங்​கள்ல இருந்து எல்​லாமே எனக்கு வியப்பா இருந்​த​தால பயோபிக் எண்ணம் உரு​வாச்​சு.”

ஜி.டி.என் குடும்​பம் எப்​படி ஏத்​துக்​கிட்​டாங்க?

“கரோனா கால​கட்​டத்​துல வீட்​டுல சும்மா இருக்​கும்​போது, ஜி.டி.என் வாழ்க்​கைக் கதையை திரைக்​கதையா எழு​தினேன். ‘வாய்ப்பு கிடைக்​குதோ, இல்​லை​யோ, நம்ம வேலையை முடிச்​சிடலாம்​’னு உட்​கார்ந்​தேன். முடிச்​சுட்டு என் நண்​பர் ஒளிப்​ப​தி​வாளர் ரிச்​சர்ட்​கிட்ட சொன்​னேன்.

அவர் அதை படிச்​சுட்டு ஒரு தயாரிப்​பாளர் கிட்ட கூட்​டிட்​டுப் போனார். அங்​க​தான், இப்ப இந்​தப் படத்​துக்கு ஒளிப்​ப​திவு பண்​ணி​யிருக்​கிற அரவிந்த் கமல​நாதன் கதை கேட்​கிற டீம்ல இருந்​தார். அவருக்கு ஜி.டி. நாயுடு குடும்​பம் ரொம்ப நெருக்​கம். உடனே அவர் குடும்​பத்தை சந்​திச்​சேன். அவங்க குடும்​பத்​துல கதையை கேட்​டுட்​டு, “நீங்க எழு​தி​யிருக்​கிறது ரொம்ப பிடிச்சிருக்குன்​னாங்க. அந்த வார்த்தை பெரிய நம்​பிக்​கையை கொடுத்தது.”

ஜி.டி.​நா​யுடுவா நடிக்க மாதவன் எப்​படி சம்​ம​திச்​சார்?

“என்னை ஜிடிஎன் குடும்​பத்​துக்​கிட்ட அழைச்​சுட்டு போனவர், நடிகர் மாதவனுக்​கும் நண்​பர். அவரே இதுல மாதவன் நடிச்சா நல்லாருக்கும்னு சொன்​னதும் எங்​களுக்​குச் சந்​தோஷம். ஆனா, அவரு சம்மதிப்​பாரா அப்​படிங்கற சந்​தேகம் இருந்​தது.

ஏன்​னா, அதுக்கு முன்னால​தான் அவர் ‘ராக்​கெட்​ரி’ படத்தை முடிச்சிருந்தார். அது​வும் பயோபிக். திரும்​ப​வும் ஒரு வாழ்க்கை கதை​யில நடிப்​பா​ரான்னு தயக்​கம் இருந்​தது. ஆனா, அவர் ஜி.டி.என் பெயரை கேட்​டதுமே ஓகே சொல்​லிட்​டார். படத்​துல அவர் வாழ்ந்​திருக்​கார். படத்​துல அவர் உழைப்பு தெரி​யும்.”

பயோபிக் படம்​னா, அதுக்கு முன் தயாரிப்பு வேலைகள் அதி​கமா இருக்​குமே? எப்​படி தயா​ரானீங்க?

“எல்லா படத்​துக்​குமே முன் தயாரிப்பு வேலைகள் அதி​க​மாகத்​தான் இருக்​கும். அதை​விட இதுக்கு கொஞ்​சம் அதி​கம். ஜி.டி.​நா​யுடு, தான் சந்​தித்த விஷயங்கள், எடுத்​துக்​கொண்ட புகைப்​படங்​கள், வாழ்க்கை பதிவு​கள் எல்லாத்​தை​யும் டைரி எழுதற மாதிரி எழு​தி, புவுண்ட் பண்ணி வச்சிருக்​கார்.

நான் எழு​திய திரைக்​கதையை அவங்க குடும்​பத்​தினர் ஏத்​துக்​கிட்​டதும், ஜி.டி.​நா​யுடு கைப்பட எழு​திய பதிவு​களை என்கிட்ட கொடுத்​தாங்க. அது படத்​துக்கு இன்​னும் அதி​கமா உதவுச்​சு. அவர் பயன்​படுத்​திய கார், பைக் எல்​லா​வற்​றை​யும் அப்​படியே படத்​துல பயன்​படுத்தி இருக்​கோம். அவர் எந்த இடத்​துல பஸ் ஸ்டாண்டை நிறு​வி​னாரோ அங்க படப்​பிடிப்பை நடத்தியிருக்கோம். இதெல்​லாம் படத்​துல ரொம்ப அழகா வந்​திருக்​கு.”

ஜி.டி.என் வாழ்க்​கை​யில எந்த பகு​தியை படமா பண்ணியிருக்கீங்க?

“அவரோட மொத்த வாழ்க்​கையை ஒரு படத்​துக்​குள் சொல்ல முடி​யாது, அதனால அவர் வாழ்க்​கை​யில சந்​திச்ச முக்கிய​மான போராட்​டம் ஒன்னு இருக்​கு. அதை​தான் சொல்லியிருக்கோம். அதுல இருந்து அவர் போராடி எப்​படி தாண்டி வர்​றார்ங்​கறது​தான் இந்​தப் படத்​தோட தனித்தன்மைன்னு சொல்​வேன்.”

டிரெய்​லர்ல பெரி​யார், எம்​.ஆர்​.​ராதா எல்​லாம் வர்​றாங்​களே...

“பெரி​யாரும் ஜி.டி.என்​-னும் நெருங்​கிய நண்​பர்​கள். பெரி​யாரோட வாழ்க்​கை​யில எல்லா விஷ​யத்​துல​யும் ஜி.டி.என் கூட இருந்திருக்கார். அதே போல எம்​.ஆர்​.​ரா​தா​வும் அவருக்கு நண்பர்தான். அதனால அவங்க வர்ற காட்​சிகளும் படத்​துல இருக்கு. ஆனா, அரசி​யல் விஷ​யங்​கள் கதை​யில இல்​லை.

பிரிட்​டீஷ் கால​கட்​டத்​துல நடக்​கிற கதை இது. அந்த கால​கட்​டத்தை எப்​படி கொண்டு வந்​திருக்​கீங்க?

“அதுக்கு தனி​யாக ஒரு ரிசர்ச் டீமே வேலை பார்த்​தாங்க. அந்த கால கட்​டத்​துல என்ன மாதிரி​யான துணி​களைப் பயன்​படுத்​தி​னாங்க, ஹேர் ஸ்டைல் எப்​படி இருந்​தது, அப்ப என்ன மாதிரி வாக​னங்​கள் இருந்​ததுன்னு எல்​லாத்​தை​யும் பார்த்​துப் பார்த்து பண்​ணியிருக்​கோம். படம் பார்க்​கும்​போது அந்​தக் கால​கட்​டம் தெளிவா தெரி​யும்.

அதேபோல கதையோட போக்​குக்​காக திரைக் ​கதை​யில சின்ன மாற்​றங்​கள் பண்​ணி​யிருக்​கோம் அதாவது 1945-ல் நடந்​ததை 1936-ம் ஆண்​டுக்கு எடுத்​துட்டு வந்​துருக்​கோம். இது மாதிரி சில மாற்​றங்​கள் இருக்​கும். ஆனா அதெல்​லாம் உண்​மை​தான்”

சத்​ய​ராஜ், ஜெய​ராம், பிரி​யாமணி, துஷாரா விஜயன், மீரா ஜாஸ்​மின் அப்​படின்னு நிறைய நட்​சத்​திரங்​கள் இருக்காங்களே..?

“இந்​தக் கதைக்கு தேவைப்​பட்​டாங்க. சத்​ய​ராஜ், ஜி.டி.என்​னோட நலம் விரும்​பி​யா, அபி​மானியா வர்​றார். அவர் படத்​துல அறி​முக​மாகிற காட்​சியே அவ்​வளவு ரசனையா இருக்​கும்.அதே போல ஒவ்​வொரு கேரக்​டருக்​கும் முக்​கி​யத்​து​வம் இருக்​கு. ஹிட்லரை, ஜி.டி.என் நேர்ல சந்​திச்சு இருக்​கார். அந்​தக் காட்​சிகள் ரொம்ப அழகா வந்​திருக்கு.

ஜிடிஎன், ஹிட்​லரை புகைப்​படம் எடுத்திருக்​கார். இப்ப இணை​யத்துல தேடினா கூட அந்​தப் புகைப்​படம் கிடைக்​குது. இதுல நான் என்​.எஸ்​.கிருஷ்ணனா நடிச்சிருக்கேன். எனக்​கான திரை நேரம் குறைவு தான். இதேபோல சின்ன சின்ன சர்​பிரைஸ் கதை​யில இருக்​கும்.”

<div class="paragraphs"><p><em>இயக்​குநர் கிருஷ்ணகு​மார் ராம்​கு​மார்</em></p></div>
GARGI: ஒற்றைக் கேள்வியில் நியாயத் தீர்ப்பு எழுதிய கார்கி | திரை தேவதைகள் 28

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in