“தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது ‘பராசக்தி’ திரைப்படம்” - கமல்ஹாசன்

“தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது ‘பராசக்தி’ திரைப்படம்” - கமல்ஹாசன்
Updated on
1 min read

சென்னை: திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம் ‘பராசக்தி’ என்று கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பராசக்தி’.

இப்படத்தைப் பார்த்துவிட்டு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன்.

அந்தக் கடிதத்தில், “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, ‘பராசக்தி’ படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப் போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று.

ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம்

பின்குறிப்பு: பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது உணர்ச்சி முந்திக் கொண்டதால் பின் தங்கிய குறிப்பு இது. முதல் பாராட்டு இந்த பயோஃபிக்‌ஷன் கதையையும், இதன் இயக்குநர் சுதா கொங்கராவையும், இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும்.

இந்தச் சினிமா சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூர்யா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

“தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது ‘பராசக்தி’ திரைப்படம்” - கமல்ஹாசன்
‘பராசக்தி’ விமர்சனம்: சிவகார்த்திகேயன் பற்ற வைத்த தீ பரவியதா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in