திரை இசைக் கலைஞர்​கள் சங்கத்துக்கு புதிய கட்டிடம்: இசை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட முடிவு

திரை இசைக் கலைஞர்​கள் சங்கத்துக்கு புதிய கட்டிடம்: இசை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட முடிவு
Updated on: 
1 min read

தமிழ்த் திரை இசைக் கலைஞர்கள் சங்​கம், 10 மாடி​யில் பிர​மாண்​ட​மான கட்​டிடம் கட்ட முடிவு செய்​துள்​ளது.

சென்னை வடபழனி​யில் உள்ள இச்​சங்​கத்​துக்​குச் சொந்​த​மான இடத்​தில் கட்​டப்பட இருக்​கும் இக்​கட்​டிடத்​தில் வணிக வளாகம் மற்​றும் திரை​யுலக பயன்​பாட்​டுக்​குத் தேவை​யான அனைத்து நவீன வசதி​களும் உரு​வாக இருக்​கிறது. இதற்​காக மாயாபஜார் ஹப் என்ற நிறு​வனத்​துடன் ஒப்​பந்​தம் செய்​யப்பட்டுள்ளது.

இதற்​கான நிதி திரட்​டு​வதற்​காக, திரைப்பட இசைக் கலைஞர்​கள் சங்​கம் சார்​பில் இசை நிகழ்ச்​சிகள் நடத்​தப்பட இருக்​கின்றன. சென்​னை, ஹைத​ரா​பாத், குஜ​ராத் ஆகிய நகரங்​களி​லும் சிங்​கப்​பூர், ஐக்​கிய அரபு அமீரகம் ஆகிய நாடு​களி​லும் இந்த இசை நிகழ்ச்சி நடக்க இருக்​கிறது. இதில் தமிழ்த் திரைப்பட இசையமைப்​பாளர்​ ஒன்​றிணைந்து இலவச​மாக இந்​நிகழ்ச்​சியை நடத்​தித் தர முடிவு செய்​துள்​ளனர். இந்​நிகழ்ச்சி டிசம்​பர் மாதம் சென்​னை​யில் பிர​ம்மாண்​ட​மாக நடக்க இருக்​கிறது. இது தொடர்பாக முதல்வர் விஜய்யை சந்தித்து பேச உள்​ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in