

ஹேமா, அறிவழகன்
கதையின் நாயகனாக அறிவழகன், நாயகியாக ஹேமா ராஜ்குமார் நடித்துள்ள திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’. ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கமல் ஜி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை ‘அருவா சண்ட’ படத்தை வி.ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன் வெளியிட, தயாரிப்பாளர் கலைப் புலி எஸ்.தாணு பெற்றுக் கொண்டார்.
படம் பற்றி கமல் ஜி பேசும்போது, “இது நகரம் சார்ந்த நட்பைப் பேசுகிற படம். நட்பு மற்றும் காதலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. நகரத்து நட்புக்கும் நெல்லை மாதிரியான பகுதியின் நட்புக்கும் என்ன மாதிரியான வேறுபாடு இருக்கிறது என்பதைப் பேசுகிறது. நாயகன் அறிவழகன் சிறப்பாக நடித்துள்ளார்” என்றார்.