போதைப்பொருளால் ஏற்படும் சீரழிவை மையப்படுத்தும் ‘முதற்கனல்’

போதைப்பொருளால் ஏற்படும் சீரழிவை மையப்படுத்தும் ‘முதற்கனல்’
Updated on
1 min read

‘அப்பா வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.வெங்கடரமணன் இயக்கியுள்ள திரைப்படம், ‘முதற்கனல்’.

புது முகங்கள் அஸ்வின், விக்னேஷ், ராஜேஷ், யோகேஷ், லட்சுமணன், ஆதி, அரிகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகெங்கா புரொடக் ஷன்ஸ் சார்பில் ஆர்.போத்திராஜ் தயாரித்துள்ளார். கந்தசாமி கோபால் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு மீராலால் இசை அமைத்துள்ளார்.

படம் பற்றி வெங்கடரமணன் கூறும்போது, "நாடெங்கும் இன்று போதைப் பொருள் பயன்பாடு அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. மதுவினால் ஏற்படும் போதை மற்றும் சீரழிவை விட சிந்தடிக் போதைப் பொருட்கள் இளைஞர்களின் வாழ்வைக் குறுகிய காலத்திலேயே சீரழித்து விடுகின்றன.

இதன் பின்னணியில் இருக்கும் உளவியல் சிக்கல், அதனால் ஒவ்வொரு குடும்பமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை இதில் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறோம்” என்றார். மே மாதம் இப்படம் திரைக்கு வருகிறது.

போதைப்பொருளால் ஏற்படும் சீரழிவை மையப்படுத்தும் ‘முதற்கனல்’
Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in