

இசை அமைப்பாளர் பரணி மகன் திருவாசகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இப்படத்தை ராம் சேவா எழுதி இயக்குகிறார். டாக்டர் சரவணன், சினாமிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பல திறமையான புதுமுகக் கலைஞர்களும் இதில் இணைகின்றனர். ஸ்டைல் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை, சென்னையில் நடைபெற்றது.
இளைஞர்களின் வாழ்க்கையையும், சம காலத்தில் நடக்கும் பெரிய மர்மத்தையும் மையமாகக் கொண்டு, எமோஷனல் சஸ்பென்ஸ் த்ரில்லராக இப்படம் உருவாகிறது. பரணி இசையமைக்கிறார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.