

‘பைனலி’ பாரத் கதாநாயகனாக நடித்துள்ள ‘மிஸ்டர் பாரத்’ படத்தை நிரஞ்சன் இயக்கியுள்ளார். இதில், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர்.சுந்தர் ராஜன், லிங்கா உள்பட பலர் நடித்துள்ளனர். இதை பேஷன் ஸ்டூடியோஸ், ஜி ஸ்குவாட், தி ரூட் நிறுவனங்கள் சார்பாக சுதன்சுந்தரம், லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ் பழனிசாமி தயாரித்துள்ளனர். இப்படம் ஆக.1-ல் வெளியாவதாக இருந்தது. இந்நிலையில் இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்பார்ப்புக்குரிய பல திரைப்படங்கள் அன்று வெளியானதால் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் உரிய இடமும் கவனமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, எங்கள் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளோம். புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.