எம்​.ஜி.ஆர்., சிவாஜி அகாடமி: 41-வது விருது வழங்​கும் விழா

எம்​.ஜி.ஆர்., சிவாஜி அகாடமி: 41-வது விருது வழங்​கும் விழா
Updated on
1 min read

எம்​.ஜி.ஆர். சிவாஜி அகாட​மி​யின் 41-வது திரைப்பட விருது வழங்கும் விழா சென்​னை​யில் நடந்​தது. சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்​குநர், சிறந்த கதாநாயகன், கதா​நாயகி மற்​றும் தொழில்​நுட்ப கலைஞர்​களைக் கவுரவிக்​கும் வகை​யில் வழங்​கப்​படும் இவ்​விருது விழா சமீபத்தில் நடை​பெற்​றது.

இதில், கே.​பாக்​ய​ராஜுக்கு சிறந்த திரைக்​கதை மன்​னன் விருது, இயக்​குநர் ஆர்​.​பார்த்​திபனுக்கு டாக்​டர் கலைஞர் விருது, நடிகை கவுதமிக்கு புரட்​சித்​தலைவி அம்மா விருது, இயக்​குநர் கே.எஸ் ரவி​கு​மாருக்கு எம்​.ஜி.ஆர் விருதுகள் வழங்​கப்​பட்​டன.

நடிகர் தில​கம் சிவாஜி விருது, இயக்​குநர் பி.​வாசுவுக்​கும் ஏவி.எம் சரவணன் சாதனை​யாளர் விருது எஸ்​.பி.​முத்​து ​ராமனுக்​கும் கேப்டன் விஜய​காந்த் விருது நளினிக்​கும் வழங்​கப்​பட்​டன. செவாலியர் விருது பெற்ற பிரபல கலை இயக்​குநர் தோட்டா தரணியை பாராட்டி விருது வழங்​கப்​பட்​டது. ‘சிறை’ படத்​துக்​காக விக்​ரம் பிரபுவுக்​குச் சிறந்த நடிகர் விருதும் சிறந்த நடிகர் சிறப்பு விருது சண்​முக பாண்​டியனுக்​கும்​ வழங்​கப்​பட்​டன.

எம்​.ஜி.ஆர்., சிவாஜி அகாடமி: 41-வது விருது வழங்​கும் விழா
Eko Climax Explained: என்ன ஆனார் குரியச்சன்? | ஓடிடி திரை அலசல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in