திரைப்படம் ஆகிறது எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு

திரைப்படம் ஆகிறது எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு
Updated on: 
1 min read

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்​பட​மாகிறது. ‘புரட்​சித்​தலை​வர் எம்​.ஜி.ஆர்’ என்ற பெயரில் உரு​வாகும் இப்​படத்​தில் எம்​.ஜி.ஆர் ஆக, ஜெ.எம்​.பஷீர் நடிக்​கிறார். இவர் ‘தேசிய தலை​வர்’ என்ற படத்​தில் முத்​து​ராமலிங்​கத் தேவ​ராக நடித்​தவர்.

தனது நடிப்​பாலும் மனிதநே​யத்​தா​லும் கோடிக்​கணக்​கான மக்​களின் மனதில் நீங்கா இடம்​பிடித்​தவர், எம்​.ஜி.ஆர். அ.தி.​மு.க. என்ற பெயரில் கட்​சித் தொடங்​கி, தேர்​தல் அரசி​யலில் களம் கண்​டார். தமிழகத்​தின் முதல்வராகப் பொறுப்​பேற்​று, தனது ஆட்​சிக்​காலத்​தில் பல்​வேறு நலத்​திட்​டங்​களை முன்​னெடுத்​தார்.

திரைப்​படம், அரசி​யல், மக்​கள் சேவை என பல்​வேறு தளங்​களில் தனக்​கென ஒரு வரலாற்றை உரு​வாக்​கிய எம்​.ஜி.ஆரின் வாழ்க்கை இன்​றும் தலை​முறை​களைத் தாண்டி பேசப்​படும் ஒன்​றாக உள்​ளது.

இந்த திரைப்​படம் வெறும் வாழ்க்கை வரலாற்றை மட்​டும் பதிவு செய்​யாமல், எம்​.ஜி.ஆருடன் நெருங்​கிப் பழகி, அவருடன் பயணித்​தவர்​கள், அவரது குடும்ப உறுப்​பினர்​கள், அரசி​யல் கட்சி நிர்​வாகி​கள், அவரது ஆட்​சிக்​காலத்​தில் பணி​யாற்​றிய அரசு அதி​காரி​கள், சக நடிகர்​–நடிகைகள் மற்​றும் திரை​யுல​கப் பிரபலங்​கள் ஆகியோரின் நேரடி அனுபவங்​களை​யும் நினை​வு​களை​யும் அடிப்​படை​யாகக் கொண்டு உரு​வாகிறது.

எம்​.ஜி.ஆர். கட்சி தொடங்​கிய அக். 17-ம் தேதி, அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்​லத்​தில், முக்​கிய பிரமுகர்கள் முன்​னிலை​யில்இப்​படத்​தின் படப்​பிடிப்பு தொடங்க உள்​ளது. படத்​தின் இயக்​குநர், தயாரிப்​பாளர், நடிகர்​– நடிகைகள்​ உள்​ளிட்​ட முக்​கிய திரைப்​படக்​ குழு​வினர்​ குறித்​த அதி​காரப்​பூர்​வ அறி​விப்​பு விரை​வில்​ வெளி​யாகும்​ என படக்​குழுவினர்​ அறிவித்​துள்​ளனர்​.

திரைப்படம் ஆகிறது எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு
ரீ-ரிலீசிலும் சாதிக்கும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்கோர்’ - உலகளவில் ரூ.720 கோடி வசூல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in