‘மாயபிம்பம்’ ட்ரெய்லர் வெளியீடு!

‘மாயபிம்பம்’ ட்ரெய்லர் வெளியீடு!
Updated on
1 min read

செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் சார்பில், கே.ஜே சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘மாயபிம்பம்’.‌ புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

நடிகர், நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்கள் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்.

படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் “எனக்குள்ளே” பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் நடிகை வாணி போஜன் வெளியிட்டனர்.

இந்த படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி வெளியிட்டார். இப்படம் வரும் ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in