

தருண் விஜய், அக் ஷரா ரெட்டி நாயகன்–நாயகியாக நடிக்கும் படம் ‘மாஸ்டர் பிளான்’. இதில் பாவல் நவகீதன், திவ்ய ஜகத், அப்புகுட்டி, தீபா சங்கர், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.எஸ். பழனி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஜே.அலி மிர்சாக் இசை அமைக்கிறார். உத்ரா புரொடக் ஷன்ஸ், டிஜே இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தை, செ.ஹரி உத்ரா எழுதி இயக்குகிறார்.
இதன் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. “தகுதிக்கு மீறிய வாழ்க்கையை வாழ விரும்புகிறது ஒரு நடுத்தர குடும்பம். அதனால் உருவாகும் பிரச்சினைகளில் இருந்து, எப்படி மீண்டு வருகிறது என்பது இதன் கதை. பிளாக் காமெடி, பேன்டஸி கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வருகிறது” என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.