மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடக்கம்

மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடக்கம்
Updated on
1 min read

மாரி செல்வராஜ் இயக்கும் ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்தப் படப்பிடிப்பை இளையராஜா தொடங்கி வைத்துள்ளார்.

இது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலில், ‘இன்று முதல் மஞ்சணத்தியின் தினங்களை தொடங்கி வைத்த எங்கள் இசைஞானிக்கு என்றைக்குமான எங்கள் நன்றியும் அன்பும்’ என்று தெரிவித்துள்ளார்.

படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர் ஆகியோர் நடிப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது பூர்ணியா ரவி, விது, காக்கா முட்டை விக்னேஷ் உள்ளிட்டோரும் படத்தில் இணைந்துள்ளனர்.

நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பாக திவ்யா மாரி செல்​வ​ராஜ் வழங்​கும் ‘மஞ்சணத்தி’ படத்தை ஃபார்​சூன் என்​டர்​டெ​யின்​மென்ட் நிறு​வனத்​தின் சுஷாந்த் பிர​சாத் இணைந்து தயாரிக்​கிறார். இந்தப் படத்துக்கு இளை​ய​ராஜா இசை அமைக்​கிறார். படத்தின் ஒளிப்பதிவை எழில் அரசு கே, படத்தொகுப்பினை செல்வா ஆர்கே, கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் மேற்கொள்கின்றனர்.

மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடக்கம்
தனுஷின் ‘ஓம்’ படத்தில் சர்வதேச கடத்தல்காரர் கதாபாத்திரத்தில் மம்முட்டி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in