கொல்​கத்​தா​வில் மணிரத்​னம் பட ஷூட்​டிங்

இயக்குநர் மணிரத்​னம்

இயக்குநர் மணிரத்​னம்

Updated on
1 min read

கமல்​ஹாசன் நடித்த ‘தக் லைஃப்’ படத்​துக்கு பிறகு மணி ரத்​னம் இயக்​கும் படத்​தில் விஜய் சேதுபதி கதா​நாயக​னாக நடிக்​கிறார்.

‘செக்​கச் சிவந்த வானம்’ படத்​துக்​குப் பிறகு மணிரத்​னத்​துடன் விஜய் சேதுபதி மீண்​டும் இணைந்​துள்​ளார். சாய் பல்​லவி நாயகியாக நடிக்​கிறார். இந்​தப் படத்​தின் முதல் ஷெட்​யூல் கொல்கத்​தா​வில் தொடங்​கி​யுள்​ளது. அங்கு 10 நாட்​கள் படப்பிடிப்பு நடை​பெறுகிறது. அடுத்​தகட்ட படப்​பிடிப்பு புதுச்​சேரி பகு​தி​யில் நடை​பெற இருக்​கிறது.

லைகா, மெட்​ராஸ் டாக்​கீஸ் இணைந்து தயாரிக்​கும் இப்​படத்​தின் மொத்த படப்​பிடிப்​பை​யும் சுமார் 40 நாட்​களுக்​குள் முடிக்​கப் படக்குழு திட்​ட​மிட்​டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. காதல் படமான இதற்கு ஏ.ஆர்.ரஹ்​மான் இசையமைக்​கிறார்.

புரி ஜெகன்​நாத் இயக்​கத்​தில் விஜய் சேதுபதி நடித்​துள்ள ‘ஸ்லம்டாக்​:33 டெம்​பிள் ரோடு’ விரை​வில் வெளி​யாக இருக்​கிறது. இதில் சம்​யுக்​தா, தபு முக்​கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர்.

<div class="paragraphs"><p><em>இயக்குநர் மணிரத்​னம்</em></p></div>
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 2 நாட்கள் அவகாசம்
<div class="paragraphs"><p><em>இயக்குநர் மணிரத்​னம்</em></p></div>
GARGI: ஒற்றைக் கேள்வியில் நியாயத் தீர்ப்பு எழுதிய கார்கி | திரை தேவதைகள் 28

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in