போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் காதல் கதை

போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் காதல் கதை
Updated on
1 min read

இயக்​குநர் அறிவழக​னிடம் உதவி இயக்​குந​ராக பணிபுரிந்த மணிகண்​டன் செல்​வ​ராஜ் இயக்கி கதா​நாயக​னாக நடிக்​கும் திரைப்படத்​தின் தொடக்க விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

போலீஸ் ஸ்டேஷன் பின்​னணி​யில் காதல் ஜோடியை மையப்படுத்தி உரு​வாகும் இப்​படத்​தில் சாய் ஜோதி நாயகி​யாக நடிக்​கிறார். ஆர்​.வெங்​கடேஷ், அருவி மதன், ஸ்ரீஜா ரவி, தணிகை உள்பட பலர் நடிக்​கின்​றனர். இதன் முதல்​கட்ட படப்​பிடிப்பு சென்னை​யில் ஆரம்​ப​மானது.

ஃபயர் பாக்ஸ் பிலிம் ஹவுஸ் சார்​பில் சரணிகா தயாரிக்​கும் இப்​படத்​துக்கு கிரி மர்ஃபி ஒளிப்​ப​திவு செய்​கிறார். ஹரி இசையமைக்​கிறார். இன்​னும் டைட்​டில் வைக்​கப்​ப​டாத இப்​படத்​தின் ஃபர்​ஸ்ட் லுக், டீஸர் விரை​வில் வெளி​யாக இருக்​கிறது.

போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் காதல் கதை
Dear Men: இருண்ட உலகமும், சயானி போன்ற மீட்பர்களும்! - திரை தேவதைகள் 04

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in