இன்​ஸ்டா பிரபலங்​கள் நடிக்​கும் ‘லவ் 3.0’

இன்​ஸ்டா பிரபலங்​கள் நடிக்​கும் ‘லவ் 3.0’
Updated on
1 min read

இன்​ஸ்​டாகி​ராம் மூலம் பிரபல​மானவர்​கள் நடித்​துள்ள படம்​, ’லவ் 3.0’. மங்கி மைண்ட்ஸ் என்​டர்​டெய்ன்​மென்ட் சார்​பில் சிவக்​கு​மார் தயாரித்​துள்​ளார். இப்​படத்தை ராஜேஷ் விகே.எழுதி இயக்கியுள்ளார். மகேஷ் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு வைகுந்த் சீனி​வாசன் இசையமைத்​துள்​ளார். இதில், இன்​ஸ்​டாவில் மில்​லியன் ஃபாலோயர்​களை கொண்ட அரனி​கா, கோய​முத்​தூர் மாப்ள, கார்த்​தி​கேயன் கே.என்.ஸ்மைலி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்​படத்​தின் முதல் தோற்​றம், தலைப்பு ஆகியவை சென்​னை​யில் உள்ள மால் ஒன்​றில் வெளி​யிடப்​பட்​டது. படக்​குழு​வினர் கலந்து கொண்​டனர். விழா​வில் கதா​நாயகி அரனிகா பேசும்​போது, ”இன்றைய தலை​முறை​யின் காதல் பற்​றிப் பேசுகிற படம் இது. அனை​வருக்​கும் பிடிக்​கும் என்று நினைக்​கிறேன். எனக்​குக் கொடுத்த சவாலான பாத்​திரத்தை இதில் சரி​யாகச் செய்திருக்கிறேன் என்​கிற நம்​பிக்கை இருக்​கிறது” என்​றார்.

கார்த்​தி​கேயன் கே.என்.ஸ்மைலி பேசும்​போது, “இன்​ஸ்​டாகி​ராமில் சின்ன சின்ன விஷ​யங்​களைச் செய்து கொண்​டிருந்​தேன். இப்போது இந்த இடத்​துக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்​கிறது” என்​றார்.

இன்​ஸ்டா பிரபலங்​கள் நடிக்​கும் ‘லவ் 3.0’
8 A.M. Metro: விட்டு விடுதலையாகும் இராவதி | திரை தேவதைகள் 10

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in