ரூ.100 கோடி வசூலை தொட்டது லோகேஷ் கனகராஜின் ‘டிசி’

ரூ.100 கோடி வசூலை தொட்டது லோகேஷ் கனகராஜின் ‘டிசி’
Updated on
1 min read

லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் ‘டிசி’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மிகப் பெரிய வெற்றி படம்’ எனக் கூறி, படம் உலகம் முழுவதிலும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமான படம் ‘டிசி’. அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படம், வெளியான ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் நாளே சுமார் ரூ.5.25 கோடி வசூல் செய்திருந்தது.

படம் குறித்த நேர்மறை விமர்சனம், திரைப் பிரபலங்களின் பாராட்டு போன்றவற்றால் நான்காவது நாளில் படத்தின் வசூல் ரூ.50 கோடியைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜுடன் வாமிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் படத்துக்கு முகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.   

ரூ.100 கோடி வசூலை தொட்டது லோகேஷ் கனகராஜின் ‘டிசி’
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி மறைவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in