பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19-ல் ரிலீஸ்?

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19-ல் ரிலீஸ்?
Updated on
1 min read

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19-ம் தேதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பின்பு தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. இதன் கிராபிக்ஸ் காட்சிகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இதனால் சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருக்கிறது படக்குழு.

தற்போது மார்ச் 19-ம் தேதி இப்படத்தை வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதன் மலேசியா உரிமையை பெற்றியிருக்கும் நிறுவனம் மார்ச் 19-ம் தேதி வெளியீடு என குறிப்பிட்டுள்ளது. ஆனால், படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. விரைவில் இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யா, சீமான், கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதனை 7 ஸ்கீரின் நிறுவனம் மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19-ல் ரிலீஸ்?
ரீ-ரிலீஸில் மோதும் விஜய் – அஜித் படங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in