மீண்​டும் தள்​ளிப் போகிறது ‘எல்ஐகே’

மீண்​டும் தள்​ளிப் போகிறது ‘எல்ஐகே’
Updated on
1 min read

பிரதீப் ரங்​க​நாதன் நடித்​துள்ள ‘லவ் இன்​சூரன்ஸ் கம்​பெனி’ (எல்​ஐகே) படத்தை விக்​னேஷ் சிவன் இயக்​கி​யுள்​ளார்.

இதில் கிருத்தி ஷெட்​டி, எஸ்​.ஜே.சூர்​யா, சீமான், யோகி பாபு, கவுரி கிஷண் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இப்​படத்தை ரவுடி பிக்​சர்ஸ் சார்​பில் நயன்​தா​ரா, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்​பில் எஸ்​.எஸ்​.லலித்​ கு​மார் தயாரித்​துள்​ளனர்.

இப்​படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக இருந்​தது. பின்​னர் டிசம்​பர் மாதத்​துக்கு தள்ளி வைக்​கப்​பட்​டது. அடுத்து காதலர் தினத்தை முன்​னிட்டு பிப்ரவரியில் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்​பட்​டது. பின் ஏப்​.3ம் தேதி வெளி​யாக இருப்பதாக அறிவித்​தனர். ஆனால், இதுவரை படத்​துக்​கான புரமோஷன் பணிகள் எது​வும் தொடங்​கப் ​பட​வில்​லை. இதனால் இப்​படம் மீண்டும் தள்​ளிப் போகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மீண்​டும் தள்​ளிப் போகிறது ‘எல்ஐகே’
8 A.M. Metro: விட்டு விடுதலையாகும் இராவதி | திரை தேவதைகள் 10

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in