கங்கை அமரன், ரோஜா நடிக்கும் ‘லெனின் பாண்டியன்’

கங்கை அமரன், ரோஜா நடிக்கும் ‘லெனின் பாண்டியன்’
Updated on
1 min read

கங்கை அமரன், ரோஜா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘லெனின் பாண்டியன்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’. மணல் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

ஜார்ஜ் மரியன், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், அர்ச்சனா, ஜெயப்பிரகாஷ், போஸ் வெங்கட், இளவரசு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர். 

மணல் கொள்ளையால் பாதிக்கப்படும் ஒரு முதியவரைப் பற்றியும், போலீஸ் சித்ரவதை பற்றியும் ட்ரெய்லரில் காட்டப்படுகிறது. மணல் கொள்ளையை எதிர்த்து போராடும் முதியவரையும், அவரின் பாதுகாப்புக்காக போடப்படும் ஒரு காவலரையும் சுற்றியே ட்ரெய்லர் நகர்கிறது.

கங்கை அமரனின் இயல்பான நடிப்பு, ஷார்ப் ஆன வசனங்கள், இளையராஜாவின் பின்னணி இசை கவனிக்க வைக்கின்றன. ட்ரெய்லரின் இறுதியில் வரும் ‘அதிகாரிகள் என்று சொல்லாதீங்க, அலுவலர் என்று சொல்லிப் பழகுங்க’ என்ற வசனம் நிச்சயம் பேசப்படும் என்பது உறுதி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in