எஸ்.ஜானகி மறைவு: முதல்வர் விஜய் உள்பட தலைவர்கள் இரங்கல்

இடது: எஸ்.ஜானகி | வலது: இளையராஜா, எஸ்பிபி

இடது: எஸ்.ஜானகி | வலது: இளையராஜா, எஸ்பிபி

Updated on
2 min read

சென்னை: பழம்​பெரும் பின்​னணிப்​பாடகி எஸ்​.ஜானகி மறைவுக்கு தமிழக முதல்​வர் விஜய், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன், முன்​னாள் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி மாநிலச்​செய​லா​ளர் வீர​பாண்​டியன் உள்பட பல்​வேறு தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழக முதல்​வர் விஜய் வெளி​யிட்​டுள்ள சமூக வலை​தளப்​ப​திவு: இந்​தி​யத் திரை​யிசை உலகில் தனது தனித்​து​வ​மான குரலால் பல தலை​முறை​களின் இதயங்​களை வென்ற பழம்​பெரும் பின்​னணிப் பாடகி எஸ். ஜானகி அவர்​களின் மறைவு மிகுந்த வேதனையளிக்​கிறது.

தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்​னடம், இந்தி உள்​ளிட்ட பல்​வேறு மொழிகளில் ஆயிரக்​கணக்​கான பாடல்​களைப் பாடி, இசை உலகில் அழி​யாத முத்​திரையைப் பதித்​தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்​ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமை​யான குரல், உணர்​வு​களை வெளிப்​படுத்​தும் அபார திறன் மற்​றும் இசைக்​கான அர்ப்​பணிப்​பால் ரசிகர்​களின் மனங்​களில் என்​றும் நிலைத்​திருப்​பார்.

அவரது மறைவு இந்​திய இசை உலகுக்கு ஈடு​செய்ய முடி​யாத பேரிழப்​பாகும். அவரது பிரி​வால் வாடும் குடும்​பத்​தினருக்​கும், திரை​யுல​கினர், இசைக் கலைஞர்​கள் மற்​றும் உலகம் முழு​வது​முள்ள அவரது ரசிகர்​களுக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கலை​யும் அனு​தாபத்​தை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன். அவரது ஆன்மா சாந்​தி​யடைய பிரார்த்​திக்​கிறேன்.

மத்​திய தகவல் மற்​றும் ஒலிபரப்​புத் துறை, நாடாளு​மன்ற விவகாரங்​கள் துறை இணை அமைச்​சர் எல்.முரு​கன்: பழம்​பெரும் பின்​னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவு மிகுந்த வேதனையளிக்​கிறது. பல மொழிகளில் ஆயிரக்​கணக்​கான பாடல்​களைப் பாடி, தனது இனிமை​யான குரலாலும், உணர்​வுபூர்​வ​மான இசை வெளிப்​பாட்​டாலும் பல தலை​முறை மக்​களின் இதயங்​களில் நீங்கா இடம்​பிடித்​தவர்.

இந்​திய இசை உலகிற்கு அவர் ஆற்​றிய பங்​களிப்பு என்​றென்​றும் நிலைத்​திருக்​கும். அன்​னாரின் மறை​வால் வாடும் குடும்​பத்​தினருக்​கும், இசை ரசிகர்​களுக்​கும், திரை​யுல​கினருக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கலை​யும் அனு​தாபங்​களை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன். அன்​னாரது ஆன்மா சாந்​தி​யடைய இறைவனை பிரார்த்​திக்​கிறேன்.

தமிழக முன்​னாள் முதல்​வரும், திமுக தலை​வரு​மான மு.க.ஸ்டாலின்: இசைக்​கு​யில் எஸ். ஜானகி மறைவெய்​திய செய்​தி​யறிந்து மிக​வும் வருந்​தினேன். மெல்​லிசை மன்​னர் எம்​.எஸ். விஸ்​வ​நாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்​கணக்​கான பாடல்​களைப் பாடிய கானகோகிலம் ஜானகி​யின் இசைப்​பயணம் மிக நீண்​டது.

அவரது மறைவு என்​பது, வானொலி தொடங்கி ஸ்பாட்​டிஃபை வரை​யில் அவரது அமுத​கானங்​களைத் தங்​கள் இல்​லங்​களில் ஒலிக்​க​விட்டு இரசிக்​கும் தமிழக மக்​கள் உள்​ளிட்ட தென்​னிந்​திய மக்​களுக்​கும், இந்​தி​யத் திரைத்​துறைக்​கும் பேரிழப்​பாகும்.

இனிமை​யும் இளமை​யும் மாறாத தனது குரலால் காலத்​தால் அழி​யாத பாடல்​களைப் பாடிய அவர், என்​றும் நம் இல்​லங்​களி​லும் நெஞ்​சங்​களி​லும் ஒலித்​துக்​கொண்டே இருப்​பார். அவரது மறை​வால் வாடும் திரைத்​துறையைச் சேர்ந்த கலைஞர்​கள், ரசிகர்​கள், அவரது குடும்​பத்​தினர் உள்​ளிட்ட அனை​வருக்​கும் ஆழ்ந்த இரங்​கலை​யும் ஆறு​தலை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

இந்​தி​யக் கம்​யூனிஸ்ட் கட்சி பொதுச்​செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: பிரபல திரைப்பட பின்​னணிப் பாடகர் எஸ். ஜானகி அம்​மாள், வயது முதிர்வு காரண​மாக ஏற்​பட்ட உடல்​நலக் குறை​வால், மைசூரு​வில் உயி​ரிழந்​தார் என்ற செய்தி மிகுந்த துயரத்தை தரு​கிறது. இனிமை​யான குரலுக்கு சொந்​தக்​காரர் அவர்.

தமிழ் மொழிப் பாடல்​களை​ மிகச் சிறப்​பாக, இனிமை​யாகப் பாடிய​வ​ரா​வார். அவர் பாடிய பாடல்​களின் மூலம் அவரது நினை​வு​கள் என்​றென்​றும் நிலைத்​திருக்​கும். அவரை பிரிந்து வாடும் குடும்​பத்​தினர் மற்​றும் உறவினர்​களுக்கு ஆழ்ந்த இரங்​கலை​யும், ஆறு​தலை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறோம்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: உலகப் புகழ்​பெற்ற பின்​னணிப் பாடகி​யும், இசை​யின் இனிமையை தனது குரலால் தலை​முறை​கள் தாண்டி உயிர்ப்​பித்து தென்​னிந்​தி​யா​வின் நைட்​டிங்​கேல் (Nightingale) என அன்​போடு அழைக்​கப்​படு​பவரு​மான எஸ்.ஜானகி உடல்​நலக்​குறை​வால் இயற்கை எய்​தி​ய​தாக வெளி​யாகி​யிருக்​கும் செய்​தி​கள் மிகுந்த வேதனையை​யும், வருத்​தத்​தை​யும் அளிக்​கிறது.

அவரை இழந்​து​வாடும் குடும்​பத்​தினர், உறவினர்​கள் மற்​றும்​ சக திரை​யுல​கினருக்​கு எனது ஆழ்ந்​த இரங்​கலை​யும்​, அனு​தாபங்​களை​யும்​ தெரி​வித்​துக்​ கொள்​வதோடு, அன்​னாரது ஆன்​மா இறைவன்​ திரு​வடிநிழலில்​ இளைப்​பாற இறைவனைப்​ பிரார்த்​திக்​கிறேன்​.

மேலும் தமிழ்​ ​மாநில ​காங்​கிரஸ்​ தலைவர்​ ஜி.கே.​வாசன்​, நடிகர்கள் ரஜினி, கமல் உள்​பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>இடது: எஸ்.ஜானகி | வலது: இளையராஜா, எஸ்பிபி</p></div>
எஸ்.ஜானகி: உணர்வுகளைக் குரலில் வடித்த வித்தகர் | நினைவலைப் பகிர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in