பட்ஜெட் பிரச்சினையால் கைவிடப்பட்டதா கவின் படம்?

பட்ஜெட் பிரச்சினையால் கைவிடப்பட்டதா கவின் படம்?
Updated on
1 min read

கவின் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம், தற்போது கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

‘ஹேப்பி ராஜ்’ படத்தினைத் தொடர்ந்து கவின் நடிக்க புதிய படமொன்றை அறிவித்தது பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம். இதனை அறிமுக இயக்குநர் பிரவீன் பரமசிவம் இயக்குவதாக இருந்தது. இதில் கவின் உடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வும் மும்முரமாக நடைபெற்று வந்தது.

இப்படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகும் போது, இதன் பொருட்செலவு அதிகமாகும் என தெரிந்திருக்கிறது. இப்படக்குழுவினர் பட்ஜெட்டை முடிந்தளவுக்கு குறைக்க முயற்சித்தும், அது சரிவரவில்லை என கூறப்படுகிறது. இதனால் இறுதியாக இப்படத்தினை கைவிட்டுவிட்டது படக்குழு.

இதற்காக கொடுத்த தேதிகளில் தான் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தில் நடித்து வருகிறார் கவின். ராம் சங்கையா இயக்கி வரும் இப்படத்தினை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது படக்குழு.

பட்ஜெட் பிரச்சினையால் கைவிடப்பட்டதா கவின் படம்?
முடிவுக்கு வந்தது சிவகார்த்திகேயனின் புதிய பட பிரச்சினை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in