‘விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் படம் இருக்க வேண்டும்’ - ‘சர்தார் 2’ நிகழ்வில் கார்த்தி கருத்து

‘விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் படம் இருக்க வேண்டும்’ - ‘சர்தார் 2’ நிகழ்வில் கார்த்தி கருத்து
Updated on
1 min read

பி.எஸ்​.மித்​ரன் இயக்​கத்​தில் கார்த்தி நடித்​துள்ள படம், ‘சர்​தார் 2’. இதில் மாளவிகா மோக​னன், ஆஷிகா ரங்​க​நாத், ரஜிஷா விஜயன், எஸ்​.ஜே.சூர்​யா, யோகி பாபு உள்பட பலர் நடித்​துள்​ளனர். பிரின்ஸ் பிக்​சர்ஸ் மற்​றும் ஐவிஒய் என்​டர்​டெய்ன்​மென்ட் நிறு​வனங்​கள் சார்​பில் எஸ்​.லக் ஷ்மன் குமார் மற்​றும் இஷான் சக்​சேனா ஆகியோர் தயாரித்​துள்​ளனர். ஜார்ஜ் சி.​வில்​லி​யம்ஸ் ஒளிப்பதிவு செய்​திருக்​கும் இந்த திரைப்​படத்​துக்கு சாம் சி எஸ் இசையமைத்​திருக்​கிறார்.

இந்​தப்​படம் செப். 10-ல் வெளி​யாகிறது. இதன் இசை மற்​றும் முன்​னோட்ட வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இதில் படக்​குழு​வினருடன் தயாரிப்​பாளர் டி. ஜி. தியாக​ராஜன், நடிகர்​கள் சிவக்​கு​மார், சூர்​யா, சின்னி ஜெயந்த், எஸ்​.ஜே.சூர்​யா, நாசர், கவின், ரவி மோகன் உள்பட பலர் கலந்​து​கொண்​டனர்.

விழா​வில் நடிகர் கார்த்தி பேசி​ய​தாவது: தமிழ் சினிமா என்​பது பொழுது​போக்​குக்​காக மட்​டுமல்ல. தமிழ் சினிமா தமிழ்​நாட்​டின் அடை​யாள​மாக இருக்​கிறது. நான் வெளி​நாட்​டில் படித்​துக் கொண்​டிருக்​கும் போது, தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களைக் காண்​பித்​தா​லும் தமிழ்ப்​படம் என்று காண்​பிக்​கும் போது, அந்த திரைப்​படத்​துக்கு என தனி கலர் உண்​டு.

அதில் நடிகர்​களின் நடிப்பை பார்ப்​பார்​கள், நடனத்தை கவனிப்​பார்​கள், சண்​டைக் காட்​சிகளை ரசிப்​பார்​கள். பிறகு கிண்​டலும் செய்​வார்​கள். பாராட்​ட​வும் செய்​வார்​கள். கிண்​டல் செய்​யும்போது, இவர்​கள் பாராட்​டும் வகை​யில் ஒரு படத்தை வழங்க வேண்​டும் என ஆசை​யாக இருக்​கும்.

பிளாஸ்​டிக் பாட்​டிலில் தண்​ணீர் குடிப்​பதை வேண்​டு​மா​னால் நீங்​கள் தவிர்க்க முடி​யாமல் தொடர்ந்​திருக்​கலாம். இந்​தப் படத்​தைப் பார்த்து பிறகு இந்​தப் படம் சொல்​லும் விஷ​யத்தை உங்​களால் தவிர்க்​கவே முடி​யாது. ஏனென்​றால் உங்​களு​டைய ஆரோக்​கி​யத்தை பற்​றிய அசைத்​துப் பார்க்​கும் உண்​மையை இதில் சொல்லி இருக்​கிறோம். இது​தான் படத்​தில் முக்​கிய​மான விஷ​யம்.

ஒரு படம் மிகப்​பெரிய விவாதத்தை ஏற்​படுத்த வேண்​டும் என்று விரும்​புபவன் நான். அதை இந்​தப் படத்​தில் இயக்​குநர் மித்​ரன் செய்​திருக்​கிறார். படம் வெளி​யான பிறகு இது தொடர்​பான மிகப்​பெரிய உரை​யாடல் ஏற்​படும். இவ்​வாறு கார்த்தி பேசி​னார்.

‘விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் படம் இருக்க வேண்டும்’ - ‘சர்தார் 2’ நிகழ்வில் கார்த்தி கருத்து
‘சர்தார் 2’ ட்ரெய்லர் எப்படி? - கார்த்தி vs எஸ்.ஜே.சூர்யா மிரட்டல்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in