மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி?

மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி?
Updated on
1 min read

மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தமிழ் இயக்கத்தில் ‘மார்ஷல்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. இப்படம் தாமதமானதால் தெலுங்கு படமொன்றை தொடங்க திட்டமிட்டு வருகிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

’கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் பாண்டிராஜ் – கார்த்தி கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்தால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். இப்படத்தினை சூர்யாவின் ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்திருக்கிறது.

ஜெயராம், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படமொன்றை இயக்கி முடித்துள்ளார் பாண்டிராஜ். இதன் இறுதிகட்டப் பணிகள் முடிந்தவுடன், கார்த்தி படம் குறித்த இறுதிகட்ட முடிவு எட்டப்படும் என தெரிகிறது.

மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி?
பாலகிருஷ்ணா படத்தில் இருந்து நயன்தாரா விலகல்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in