கனகாவை சந்தித்தது ஏன்? - ராமராஜன் விளக்கம்

கனகாவை சந்தித்தது ஏன்? - ராமராஜன் விளக்கம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நெகிழ்ச்சி
Published on

ராம​ராஜன் நடித்து பிரம்​மாண்ட வெற்​றி​ப் பெற்ற ‘கர​காட்டக்காரன்’ படத்​தின் மூலம் கதா​நாயகி​யாக அறி​முக​மானவர் கனகா. தொடர்ந்து மலை​யாளம், தெலுங்கு உள்பட பல்​வேறு படங்​களில் நடித்த கனகா, தனது தாயாரும் நடிகை​யு​மான தேவிகா மறைவுக்குப் பிறகு தனிமை​யில் வசித்து வரு​கிறார்.

சில மாதங்​களுக்கு முன் அவர் நடிகை குட்டி பத்​மினியை சந்தித்து பேசிய புகைப்​படங்​கள் வெளி​யாகி இருந்​தன. சமீபத்​தில் அவர் தந்தை​யும் கால​மா​னார். இந்​நிலை​யில் அவர் தனது முதல் பட ஹீரோ ராம​ராஜனை சந்​தித்​துப் பேசி​யுள்ள புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யா​யின.

இதுபற்றி ராம​ராஜனிடம் கேட்​ட​போது, “கனகாவைப் பார்க்க வேண்டும் என நீண்ட நாட்​களாக நினைத்​துக் கொண்​டிருந்​தேன். அவரை தொடர்பு கொண்டு உங்​களைச் சந்​திக்க வேண்​டும்” என கேட்​டேன். நானே வரு​கிறேன் என கூறி, என் வீட்​டுக்கு வந்​தார்.

நான் இயக்​கிய ‘மரு​தாணி’ படத்​தில் அவரைத்​தான் அறிமுகப்படுத்த நினைத்து அவர் அம்​மா​விடம் பேசினேன். ‘அவள் சின்​னப் பெண்​ணாக இருக்​கிறாள், இன்​னும் கொஞ்​சம் வயதாகட்டும்’ என்று தேவிகா மறுத்​து​விட்​டார். பிறகு அவர் எனக்கு ஜோடியாகவே நடித்​தார்.

இந்த விஷ​யங்​களை அவரிடம் இப்​போது சொன்​னேன். அவர், ‘அப்போது நீங்​கள் அம்​மா​விடம் பேசிக் கொண்​டிருந்​ததை உள்ளே நின்று கேட்​டுக்​கொண்​டிருந்​தேன்’ என்​றார்.

பிறகு பழைய விஷயங்​களைப் பேசிக் கொண்​டிருந்தோம். அவருடன் நான் நடித்த கரகாட்​டக்​காரன், தங்​க​மான ராசா படங்​கள் வெற்​றி ​பெற்றன. அவர், தான் குண்​டாகி​விட்​ட​தாகச் சொல்லி வருத்தப்பட்டார்.

‘அது ஒன்​றுமில்​லை, மனசு​தான் முக்​கி​யம்’ என்று சொன்​னேன். என் வீட்​டில் இரு​வரும் மதிய உணவு சாப்​பிட்​டோம். பழைய விஷயங்​களை அவரிடம் பகிர்ந்​து​கொண்​டது மகிழ்ச்​சி​யாக இருந்தது” என்றார்.

கனகாவை சந்தித்தது ஏன்? - ராமராஜன் விளக்கம்
‘பராசக்தி’ தரும் தாக்கம் என்ன? - திரைப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in