அஜித்குமார் படத்தில் நடிக்கிறாரா மோகன்லால்?

அஜித்குமார் படத்தில் நடிக்கிறாரா மோகன்லால்?
Updated on
1 min read

நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். அஜித்குமாரின் 64-வது படமான இதன் முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்போது கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், அதை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தைத் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருக்கிறது.

இதற்கிடையே இப்படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இதில் நாயகியாக லீலா நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

அஜித்குமார் படத்தில் நடிக்கிறாரா மோகன்லால்?
‘4த் ஃப்ளோர்’ படத்தை ஒரே ஜானருக்​குள் அடக்க முடியாது! - இயக்​குநர் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in