

ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் நடித்துள்ள ‘இம்மார்ட்டல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
‘கிங்ஸ்டன்’ படத்துக்கு பிறகு, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள புதிய படம் ‘இம்மார்ட்டல்’. இப்படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கி இருக்கிறார். அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக அருண் ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் காதல் காட்சிகளாக சற்றே தூக்கலாக தொடங்கும் டீசர் இறுதியில் அமானுஷ்ய காட்சிகளுடன் முடிகிறது. ஏலியனா அல்லது வேறு ஏதேனும் ஜந்துவா என்பது குறித்த விளக்கம் எதுவும் டீசரில் அளிக்கப்படவில்லை. சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியிலான இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர் தூண்டுகிறது. இப்படத்தை வரும் 2026-ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.