அறிமுக இயக்குநரின் படத்துக்கு இசை அமைக்கும் இளையராஜா

அறிமுக இயக்குநரின் படத்துக்கு இசை அமைக்கும் இளையராஜா
Updated on: 
1 min read

பாலா இயக்கிய ‘நந்தா’, அமீர் இயக்கிய ‘மவுனம் பேசியதே’ ஆகிய படங்களைத் தயாரித்த, அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு, அடுத்து தயாரிக்கும் படத்தை அமீரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இராம்.நா இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. இதில், இயக்குநர்கள் சேரன், சசிகுமார், அமீர், பாலா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் சிவக்குமார், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, பூர்ணிமா பாக்யராஜ், கரு பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார். வாஞ்சி முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார் பரதன் வசனம் எழுதுகிறார். இதில் நடிக்கும் நட்சத்திரங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளி யிடப்பட இருக்கின்றன.

அறிமுக இயக்குநரின் படத்துக்கு இசை அமைக்கும் இளையராஜா
தங்கம், போதைப் பொருட்கள் கடத்தலின் வழித்தடமாகும் நாகை கடற்கரை - தொடரும் அத்துமீறல்களும் பின்னணியும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in