

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘பராசக்தி’. 1960-ம் காலகட்டத்தில் நடக்கும் கதையை கொண்ட இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.
இப்படம், பொங்கலை முன்னிட்டு ஜன.14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் இப்படத்தின் ரிலீஸ் தேதி இப்போது மாற்றப்பட்டுள்ளதாகவும் அதாவது ஜன.10-ம் தேதியே வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை.
பொங்கலை முன்னிட்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம், ஜன.9ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் இரண்டு படத்துக்கும் சரியான போட்டியாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.