

குரு சோமசுந்தரம், அனுமோள், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள படம், ‘பாரிஸ் கஃபே’. கண்மணி ரங்கநாதன் தயாரித்துள்ள இப்படத்தை சரஜ் சீலன் இயக்கியுள்ளார். கே இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அனுமோள் பேசும்போது, “இந்தப் படம் மிகவும் முக்கியமான படம். சமுதாயத்துக்குத் தேவையான படங்களை மட்டும் நான் தேர்ந்தெடுத்து நடிப்பேன். இதுவும் அப்படித்தான். யாராலும் தவிர்க்க முடியாத, முக்கியமான ஒரு விஷயத்தை இப்படத்தில் பேசியிருக்கிறோம்.
இயக்குநரின் தெளிவும் நம்பிக்கையும் எனக்குக் கூடுதல் பலத்தைக் கொடுத்தது. குரு சோமசுந்தரத்துடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார். தயாரிப்பாளர் கண்மணி ரங்கநாதன் பேசும்போது, ‘‘இதுசின்ன பட்ஜெட் படம்தான். ஆனால் வலுவான மெசேஜ் இருக்கிறது.
நம் சமுதாயத்தில் நடக்கும் முக்கியமான விஷயம் பற்றி பேசுகிற படம் இது. இப்படத்தின் இயக்குநர் என் கணவர். இந்தப் படத்துக்காக நிறைய ஆய்வு செய்திருக்கிறார்” என்றார்.