பொருளா​தா​ரச் சவால்​களை எதிர்கொள்​வது எப்படி? - திரைத் ​துறையினருக்கு கமல்ஹாசன் அழைப்பு

பொருளா​தா​ரச் சவால்​களை எதிர்கொள்​வது எப்படி? - திரைத் ​துறையினருக்கு கமல்ஹாசன் அழைப்பு
Updated on
1 min read

திரைத்​துறை​யில் பொருளா​தா​ரச் சவால்​களை எதிர்​கொள்​வது குறித்த உரை​யாடலுக்​காக திரைத்​துறை​யினருக்கு நடிகரும் எம்.பி​யு​மான கமல்​ஹாசன் அழைப்பு விடுத்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

மேற்​காசி​யா​வில் நீடித்து வரும் போரி​னால் உலகம் முழு​வதும் நெருக்​கடி நிலைமை ஏற்​பட்​டுள்​ளது. இதன் தாக்​கத்தை இந்தியாவும் எதிர்​கொண்டு வரு​கிறது. அதி​கரித்து வரும் தயாரிப்புச் செலவு​கள், நிச்​சயமற்ற வரு​மானம் என இந்​தி​யத் திரைத்​துறை ஏற்​கெனவே தத்​தளித்​துக் கொண்​டிருக்​கை​யில் இப்படியொரு சூழ்​நிலை ஏற்​பட்​டுள்​ளது. பொருளா​தார மந்த நிலை​யும், பண வீக்​க​மும், வேலை இழப்​பு​களும் உரு​வாக்​கும் அழுத்​தங்​கள் காரண​மாக, வரவிருக்​கும் மாதங்​களில் மக்​கள், பொழுது​போக்​குக்​காகச் செல​விடும் விதங்​களும் மாறக்​கூடும். இந்​தச் சுமை ஒட்டு மொத்​தத் திரை​யுல​கின் மீது விழும்.

சினிமா தொடர்ந்து வளர வேண்​டு​மா​னால், செல​வழிக்​கப்​படும் ஒவ்​வொரு ரூபா​யும் திரைப்படத்​துக்கு முறை​யாகப் பயன்​படுத்​தப்​படு​வதை உறுதி செய்ய வேண்​டும்; வெறும் பிரம்​மாண்டமான தோற்​றத்​துக்​காக மட்​டும் அது இருக்​கக்​கூ​டாது.

நாம் செய்ய வேண்​டிய உண்​மை​யான சீர்​திருத்​தங்​கள் வேறு இடங்​களில் உள்​ளது. மோச​மான திட்​ட​மிடல், தவிர்க்க சாத்​தி​ய​முள்ள வீணடிப்​பு​கள், ஆரவார​மான ஆடம்​பரங்​கள், தேவையற்ற வெளி​நாட்​டுப் பயணங்​கள், தயாரிப்​புத் தாமதங்​கள் மற்​றும் செலவு செய்​வதற்​கும் அதன் நோக்​கத்​துக்கு இடையே அதி​கரித்து வரும் இடைவெளி ஆகிய​வற்​றில்தான் சீர்​திருத்​தங்​கள் தேவை.

இந்​தி​யத் திரைப்​படத்​துறை முழு​வதும் உள்ள சிந்​தனை​யாளர்​கள் ஒன்​றிணைவதற்​கான சரி​யான தருணம் இது​வென நம்​புகிறேன். வரவிருக்​கும் பொருளா​தா​ரச் சவால்​களை நாம் எவ்​வாறு கூட்டு முயற்​சி​யுடன் எதிர்​கொள்​வது என்​பது குறித்த விரி​வான விவாதத்​துக்​காக தயாரிப்​பாளர்​கள், நடிகர்​கள், இயக்​குநர்கள், தொழிற்​சங்​கங்​கள், ஸ்டூடியோக்​கள், திரையரங்கு உரிமை​யாளர்​கள், விநி​யோகஸ்​தர்​கள், ஓடிடி தளங்​கள் மற்​றும் கூட்​டமைப்​பு​களுக்கு இடையி​லான மனம் திறந்த உரை​யாடலுக்கு அழைப்பு விடுக்​கிறேன்.

ஆடம்​பர​மாகச் செய்​யப்​படு​வது​தான் பிர​மாண்​டம் என தவறாகப் புரிந்து கொள்​ளப்​படு​கிறது. ஆனால் நமது மிகச்​சிறந்த திரைப்​படங்​கள், ஆடம்​பரத்​தால் ஆனவை அல்ல. மாறாக தெளி​வான திட்​ட​மிடல், நேர்த்​தி​யான செய​லாக்​கம் மற்​றும் உறு​தி​யான நம்​பிக்​கை​யுடனே அவை உரு​வாக்​கப்பட்​டன.

உலக அளவில் நிச்​சயமற்ற சூழ்​நிலை நில​வும் காலத்​தில் ஒவ்​வொரு துறை​யும் தொலைநோக்​குப் பார்​வை​யுட​னும் கட்​டுப்​பாட்​டுட​னும் செயல்பட வேண்​டும் என்​ப​தை, பொறுப்​பான நுகர்வு மற்​றும் கூட்டு ஒழுக்​கத்​துக்​கான தேசிய அளவி​லான அழைப்பு நமக்கு சரி​யான நேரத்​தில் நினை​வூட்டுகிறது. இந்​தி​யத் திரைப்​படத்​துறை​யும் இந்​தச் சூழலுக்கு ஏற்ப தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்​டும்.

சினிமா என்பது வெறும் பொழுது​போக்​கை​யும் தாண்​டிய பொறுப்​பு​களைக் கொண்​டுள்​ளது. இந்​தத் துறையி​லிருந்து அதி​கம் பெற்​றுக் கொண்​ட​வர்​கள் தான் முதலில் முன்​மா​திரி​யாகத் திகழ வேண்​டும். இன்று சினி​மா​வின் பொருளா​தா​ரத்​தை நாம் பாது​காத்​தால், சினி​மா​வின் எதிர்​காலத்​தை நாளை பாது​காக்க முடியும். இவ்​வாறு கமல்ஹாசன் தெரி​வித்​துள்​ளார்.

பொருளா​தா​ரச் சவால்​களை எதிர்கொள்​வது எப்படி? - திரைத் ​துறையினருக்கு கமல்ஹாசன் அழைப்பு
Gangubai Kathiawadi: கருப்பு ரோஜாக்களின் உரிமைக் குரல் கங்குபாய் | திரை தேவதைகள் 17

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in