‘ரூட்’ மூலம் தமிழில் அறிமுகமாகும் இந்தி நடிகர் அபார்ஷக்தி குரானா!

‘ரூட்’ மூலம் தமிழில் அறிமுகமாகும் இந்தி நடிகர் அபார்ஷக்தி குரானா!
Updated on
1 min read

கவுதம் ராம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள படம், ‘ரூட்’. இந்தி நடிகர் அபார்ஷக்தி குரானா இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

பவ்யா திரிகா, ஒய்.ஜி.மகேந்திரா, பாவ்னி ரெட்டி, லிங்கா, ஆர்ஜே ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை சூரியபிரதாப் எஸ். எழுதி இயக்கியுள்ளார். வெரஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில், ஷேக் முஜீப், சஞ்சய் சங்கர், ராஜராஜன் ஞானசம்பந்தம், தனிஷ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தயாரித்துள்ள இந்தப்படத்துக்கு அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். அரன் ரே இசை அமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் சூரியபிரதாப் கூறும்போது, ``இப்படத்துக்கு முன் நஸ்ரியா நடித்துள்ள வெப் தொடர் ஒன்றை இயக்கி இருக்கிறேன். சோனி லைவ் தளத்தில் அது வெளியாக இருக்கிறது. இதில் நாயகன் கவுதம் ராம் கார்த்திக், சிபிசிஐடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

ஒரு சீரியல் கில்லரை கண்டுபிடிக்கச் செல்லும் அவர், அந்த கில்லரின் பிடிக்குள் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து எப்படி மீள்கிறார், அவரை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பது திரைக்கதை. வழக்கமான சீரியல் கில்லர் படத்தில் என்னவெல்லாம் இருக்குமோ, அது இதில் இருக்காது.

அதிக ரத்தம் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும்படியாக இருக்கும். இதில் இந்தி நடிகர் அபார்ஷக்தி குரானா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வெப் தொடர் ஒன்றில் அவர் நடிப்பைப் பார்த்துவிட்டுப் பேசினோம். அவர், நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் சகோதரர் என்பது பிறகுதான் தெரிந்தது. இந்தக் கதையின் கதாபாத்திரத்தில் அழகாகப் பொருந்தி இருக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடந்து வருகின்றன” என்றார்.

‘ரூட்’ மூலம் தமிழில் அறிமுகமாகும் இந்தி நடிகர் அபார்ஷக்தி குரானா!
அன்று அதிமுக... இன்று திமுக! - இன்னொரு பிளவுக்குத் தயாராகிறதா தமிழக காங்கிரஸ்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in