

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்சஸ் சார்பில் ஜெய்வர்தா தயாரிக்கும் இதில், கவுரி பிரியா நாயகியாக நடிக்கிறார். முன்னாள் ஹீரோ அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஜார்ஜ் மரியம், ப்ரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோஃபா பாய் ரசூல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
“இது முழுமையான ‘ஃபீல்-குட்’ படமாக இருக்கும். ஜி.வி.பிரகாஷ் ஹேப்பிராஜாவாக நடித்துள்ளார். இந்தப் படம் மகிழ்ச்சியான, ஊக்கமளிக்கும் அனுபவத்தைப் பார்வையாளர்களுக்குக் கொடுக்கும்.
கோபம், மகிழ்ச்சி அனைத்தும் நம் கையில் தான் உள்ளது என்பதை உணர்த்தும் படம் இது. படப்பிடிப்பு நிறைவடைந்தது. மொத்தக் குழுவினரின் அர்ப்பணிப்பு, அவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருந்தது” என்று படக்குழு கூறியுள்ளது.