ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ள 2 புதிய படங்கள்

ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ள 2 புதிய படங்கள்
Updated on
1 min read

ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள அடுத்த 2 புதிய படங்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மெண்டல் மனதில்’ படத்தில் நாயகனாக நடித்து, தயாரித்து, இசையமைத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தினை முடித்துவிட்டு அடுத்ததாக யாருடைய படத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

அடுத்ததாக 2 படத்தில் நாயகனாக நடித்து தயாரிக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ். அதில் ஒரு படத்தினை விக்னேஷ் கார்த்திக் இயக்கவுள்ளார். சமீபத்தில் வெளியான ‘ஹாட் ஸ்பாட் 2’ படத்தின் இயக்குநர் இவர். மேலும், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘அடியே’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நாயகியாக தெலுங்கில் ‘பேபி’ படத்தில் நடித்த வைஷ்ணவி சைத்தன்யா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு படத்தினை ‘ஜோ’ படத்தின் இயக்குநர் ஹரி இயக்கவுள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக மாளவிகா மனோஜ் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த இரண்டு படத்தின் முதற்கட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த இரண்டு படங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ள 2 புதிய படங்கள்
பிரியங்கா மோகன் நடித்துள்ள ‘மேட் இன் கொரியா’ - ஓடிடியில் நேரடி வெளியீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in