கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘செங்குலம்’

கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘செங்குலம்’
Updated on: 
1 min read

கவுதம் ராம் கார்த்​திக் ஹீரோவாக நடிக்​கும் படத்​துக்கு ‘செங்​குலம்’ என பெயரிடப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் சின்​னசாமி பொன்​னையா திரைக்​கதை, வசனம் எழுதி இயக்​கும் இப்​படத்​துக்கு யுவன் சங்​கர் ராஜா இசையமைக்​கிறார். கிஃப்ட்​சன் ராபர்ட் ஒளிப்​ப​திவு செய்​கிறார். இதைக் கண்​ணன் ரவி குழு​மம் சார்​பில் கண்​ணன் ரவி தயாரிக்​கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பு செய்​கிறார்.

இப்​படத்​தின் படப்​பி​டிப்பு கோவில்​பட்​டி​யில் தொடங்​கியது. தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, தென்​காசி, தேனி, பொள்​ளாச்சி உள்​ளிட்ட பகுதி​களி​லும் காஷ்மீரிலும் படப்​பி​டிப்பு நடை​பெறுகிறது. தமிழ், தெலுங்கு, மலை​யாளம், கன்​னடம், இந்தி என 5 மொழிகளில் உரு​வாகும் இப்​படம் 2027-ம் ஆண்டு வெளியாக இருக்​கிறது.

இப்​படத்​தின் டைட்​டில் போஸ்​டர் மற்​றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்​குழு வெளி​யிட்​டுள்​ளது. போஸ்டரில், ரத்​தம் தேய்ந்த வேல்​கம்பு, அதைச் சுற்​றியுள்ள சிவப்பு நிறத் துணிகள் மற்​றும் கரிசல்​மண், புழுதி, ரத்​தம் எனப் படத்​தின் தலைப்​புக்கு ஏற்ற வகை​யில் அதிரடி​யான தோற்​றம் இடம்​பெற்​றுள்​ளது.

கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘செங்குலம்’
ரூ.1,000 கோடி வசூலை கடந்தது ‘ராமாயணா’

X