

கவுதம் ராம் கார்த்திக் நடித்து வரும் படம், ‘பிளடி பாலிடிக்ஸ்’. அரசியல் த்ரில்லர் படமான இதை தினா ராகவன் இயக்கியுள்ளார். அஞ்சனா, ரோபி, பி.வாசு, செல்வராகவன், வெங்கடேஷ், இந்துமதி, ஆதித்யா கதிர், பாக்கியம் சங்கர் உள்பட பலர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். ராஜு முருகன் வசனம் எழுதியுள்ள இப்படத்துக்கு பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தில் அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஆக்ரோஷமான இளைஞராகக் கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். வெளியான சில நிமிடங்களிலேயே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் கணேஷ் கே பாபு வழங்கும் இப்படத்தை சஞ்சய் முத்துக்குமார் இணை தயாரிப்பு செய்கிறார்.