‘மொய் விருந்து’ பின்னணியில் எமோஷனல் படம்

‘மொய் விருந்து’ பின்னணியில் எமோஷனல் படம்
Updated on
1 min read

அறிமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கும் படம், ‘மொய் விருந்து’. இதை எஸ்கே பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் எஸ்.கமலக்கண்ணன் தயாரிக்கிறார். இதில், அர்ச்சனா முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ரக்‌ஷன், ஆயிஷா - நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். அபர்ணதி, தீபா சங்கர், சுஜாதா, மானஸ்வி கொட்டாச்சி, அருள்தாஸ், நாமோ நாராயணன் உள்பட பலர் இணைந்து நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார்.

படம்பற்றி இயக்குநர் மணிகண்டன் கூறியதாவது: "நான் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளுக்கு சென்றபோது, `மொய் விருந்து' நடப்பதை பார்த்தேன். கோடிக் கணக்கில் மொய் வரும் என்பதை நம்ப முடியவில்லை.

ஒரு குடும்பம் 3 வருடத்துக்கு ஒரு முறை தான் மொய் விருந்து நடத்த முடியும். அந்த 3 வருடத்தில் அவர்கள் வாங்கிய மொய்ப் பணத்தை திருப்பி செய்ய வேண்டும். அப்படி சரியாக செய்பவர்களுக்கே அதிக மொய் வரும். இந்த பழக்கம் மூலம் ஊரே ஒழுக்கமாக இருக்கும்.

ஊதாரியாகவோ, குடிகாரராகவோ இருந்தால் திருப்பிச் செய்ய மாட்டான் என்று மொய் வைக்க மாட்டார்கள். இதனால் ஊரே ஒழுக்கமாக இருக்கும். இது எனக்கு பெரிய ஆச்சரியம் தந்தது. இப்போது, அதை கமர்​ஷிய​லாக்கி விட்​டார்​கள்.

இதன் பின்​னணி​யில் எமோஷனலான ஒரு கதையை வைத்து உருவாக்கப்பட்டப்படம் இது. ‘மொய்க்​காரன்​பட்​டி’ என்ற கற்பனை கிராமத்​தில் கதை நடப்​பது​போல அமைக்கப்பட்டுள்ளது.

மொத்​தப் படப்​பிடிப்​பை​யும் கொடைக்​கானல் அரு​கே​யுள்ள பண்ணைக்​காடு என்ற கிராமத்​தில் எடுத்​துள்​ளோம். போஸ்ட் புரொடக் ஷன் பணி​கள் நடந்து வரு​கின்​றன. பிப்​ர​வரி​யில் வெளியிட திட்​ட​மிட்​டுள்​ளோம். இவ்​வாறு மணி​கண்​டன் கூறி​னார்​.

‘மொய் விருந்து’ பின்னணியில் எமோஷனல் படம்
Stranger Things 5 Vol 1: பரபரப்பை நோக்கி நகரும் இறுதிக்கட்டம் | ஓடிடி திரை அலசல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in