“கதையும் உணர்ச்சிகளும் மொழிக்கு அப்பாற்பட்டவை” - படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி நேர்காணல்

“கதையும் உணர்ச்சிகளும் மொழிக்கு அப்பாற்பட்டவை” - படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி நேர்காணல்
Updated on
2 min read

“ஒரு திரைப்​படத்​துக்​கான காட்​சிகளை வெட்​டிச் சேர்ப்​பது மட்​டும் படத்​தொகுப்பு அல்ல. ஒரு கதையை அதன் சுவைக் குறை​யாமல் சொல்​லும் முக்​கிய கலை​தான் அது” என்​கிறார் படத்​தொகுப்​பாளர் விஜய் வேலுக்குட்​டி. தமிழ் சினி​மா​வின் குறிப்​பிடத்​தக்க படத் தொகுப்​பாளர்களில் ஒரு​வ​ரான இவர், அஜித்​தின் ‘துணிவு’, ‘வலிமை’, ‘குட் பேட் அக்​லி’, விஷாலின் ‘மார்க் ஆண்​டனி’, கார்த்​தி​யின் ‘சர்​தார் 2’ உள்பட பல ஆக் ஷன் திரைப்​படங்​களில் பணி​யாற்​றிய​வர்.

“தொடர்ந்து ஆக் ஷன் படங்​களாகத்​தான் எனக்கு வந்​துகிட்​டிருக்​கு. எனக்கு பிடிச்ச ஜானர் டிரா​மா, ரொமான்​ஸ்​தான். நான் விரும்​பிப் பார்க்​கிற படங்​கள் கூட அந்த மாதிரி இருக்​கும். ஆனா, ஆக் ஷன் படங்​கள்​தான் அதி​கமா பண்​றேன். சண்டை இயக்​குநர்​களோட தொடர்ந்து பழகி, காட்​சிகளை எடிட் பண்​றதும் பிடிச்​சிருக்​கு. எதிர்​காலத்​துல மற்ற கதைகள் கொண்ட படங்​கள் அதி​கமா வரு​மோ, என்​னமோ?” என்​கிறார் விஜய் வேலுக்​குட்​டி.

Q

‘சர்​தார் 2’-ல எது உங்​களுக்கு சவாலான விஷயமா இருந்​தது?

A

‘சர்​தார்’ படத்​துக்கு நான் எடிட்​டிங் பண்​ணலை. இந்​தப் படத்​துக்கு பண்​ணி​யிருக்​கேன். இதுல பார்ட் 1 கதைக்கு முன்​னாடி என்ன நடந்​ததுனு பீரியட்ல இருந்து கதை ஆரம்​பிக்​கும். கேரக்​டரை பின்​பற்​றிய கதை சொல்​லல் எனக்கு சுவாரஸ்​ய​மாக இருந்​தது. சவாலான விஷ​யம்னு சொன்​னா, ஆக் ஷன் காட்​சிகள்​தான். ஏன்​னா, இப்ப பொதுவா ஒரு சண்​டைக் காட்​சின்​னா, ஏழு, எட்டு கேமரா வச்சு ஷூட் பண்​ணிட்டு வர்​றாங்க. அதுல நிறைய ஃபுட்​டேஜ் இருக்​கும். அதுல தேர்வு பண்ணி எடிட் பண்​ணினது​தான் ‘சேலஞ்​சிங்​கா’ இருந்​தது. இருந்​தா​லும் ஆக் ஷன் படங்​கள் அதி​கம் பண்​ணிய அனுபவம் இருக்​கற​தால அதை எளிதா பண்​ணிட்​டேன்.

Q

டிஜிட்​டல் வந்த பிறகு எடிட்​டிங் ஈஸி ஆயிடுச்​சுன்னு சொல்​றாங்​களே, உண்​மை​யா?

A

அப்​படிச் சொல்ல முடி​யாது. சாதக, பாதகம்னு பார்த்தா எல்​லாத்​துல​யுமே இருக்​கு. ஃபிலிம்ல ஷூட் பண்​ணும்​போது, ‘இவ்​வளவு ஃபுட்​டேஜ்​தான், இத்​தனை கேன்​’-​தான் ஷூட் பண்​ணணும்னு தயாரிப்பு தரப்​புல சொல்​லிடு​வாங்க. டிஜிட்​டல் வந்த பிறகு அது மாறி​யிருக்​கு. நிறைய காட்​சிகளை ஷூட் பண்​ணிட்டு வர்​ற​தால, எடிட்​டிங்ல நிறைய காட்​சிகளைப் பார்த்து சிறந்​ததை தேர்வு பண்ண முடி​யும்.

அதுக்கு நிறைய நேரம் செலவு பண்​ணணும். அதே நேரத்​துல பல ‘வெர்​ஷன்​ஸ்’ பண்ணி பார்க்க முடி​யும்ங்கற சாதக​மும் இதுல இருக்​கு. ஹார்ட் டிஸ்க்​குல இருக்​கற​தால, எத்​தனை வெர்​சன் வேணாலும் கட் பண்​ணிக்​கலாம். எந்த டேக் வேண்​டு​மா​னாலும் டக்​குனு எடுத்து பயன்​படுத்த முடி​யும்.

Q

ஒரு படத்​துக்கு பல ‘வெர்​ஷன்’ எடிட் பண்​றது அவசி​யம்​தா​னா?

A

கண்​டிப்​பா. எல்லா படத்​துக்​குமே எடிட்​டிங்ல பல வெர்​ஷன் பண்ண வேண்​டி​யிருக்​கும். ஏன்​னா, சினி​மாங்​கறது ஒருத்​தரோட முடிவு மட்​டுமல்ல. அது கூட்டு முயற்​சி​தான். தயாரிப்பு தரப்​புல பார்த்​துட்டு ஒரு முடி​வெடுத்து சொல்​லு​வாங்க. மற்ற டீம் பார்த்​துட்டு ஒரு கருத்து சொல் வாங்க. டெக்​னீஷியன்ஸ் ஒரு விஷ​யம் சொல்​வாங்க. கடைசியா இயக்​குநர் மற்​றும் தயாரிப்​பாளரோட முடிவு என்​னவோ அப்​படித்​தான் படம் வெளி​யில வரும்.

Q

இரண்​டரை மணி நேர படத்​துக்கு 4 மணி நேர காட்​சிகளை ஷூட் பண்​ணிட்டு வந்து சில இயக்குநர்​கள், எடிட்​டர்ட்ட கொடுக்​கறாங்​கன்னு சொல்​றாங்​களே...

A

இதை இரண்டு விதமா பார்க்​கலாம். கதை இது​தான்னு முடிவு பண்​ணி​தான் படத்​தோட ஷூட்​டிங்கை ஆரம்​பிக்​கிறாங்க. சில நேரம் அதி​கமா ஷூட் பண்​ணி, அதுல இருந்து சிறந்​ததை வச்​சுக்​கலாம்னு நினைக்​கிறாங்க. இது ஒரு விதத்​துல நல்​லது. நிறைய ‘மெட்​டீரியல்’ இருந்தா அதுல இருந்து நல்​லதை கொண்டு வர முடி​யும் அப்​படிங்கற விஷய​மும் இருக்​கு.

அனுபவ​முள்ள இயக்​குநர்​கள் மட்​டும்​தான் கரெக்டா எடுக்க முடி​யும். இன்​னொரு பக்​கம் அதி​கமா ஷூட் பண்​ணி, அதை எடிட் பண்​றதுக்கு அதிக நேரம் ஆகும்ங்​கற​தால குறிப்​பிட்ட காலத்​துல படத்​தொகுப்பை முடிக்க முடி​யாத பாதக​மும் இருக்​கு. அடுத்த மாசம் ரிலீஸ்னு சொல்​லும்​போது, அதை அவ்​வளவு விரைவா கொடுக்க முடி​யாது.

Q

மற்ற மொழிகள்​ல​யும் எடிட்​டர்​கள் வேலை பார்க்​கிறாங்க. மொழி பிரச்​சினை இருக்​கா​தா?

A

எடிட்​டிங்​கறதே கதை சொல்​லல்​தான். கலை​யில, கதை சொல்​றதுக்கு பல்​வேறு வழி​முறை​கள் இருக்​கு. அதுல ஒண்ணு படத்​தொகுப்​பு. அதனால ஒரு எடிட்​டர் மற்ற மொழியை தெரிஞ்​சுக் கறது நல்​லது. இல்​லைனா கூட அது பெரிய பாதகம் இல்​லை. ஏன்​னா, கதை​யும் உணர்ச்சிகளும் மொழிக்கு அப்​பாற்​பட்​டவை. மொழி, தெரியலைன்​னாலும் கதைகள் புரி​யும் இல்​லை​யா? அப்​படியே இல்​லை​னாலும் ஸ்கிரிப்ட் டைரட்​டரை பக்​கத்​துல வச்​சுக்​கிட்டு பண்​ணிடலாம். நான் இப்ப தெலுங்கு படம் பண்​ணப் போறேன். எனக்கு அந்த மொழி தெரி​யாது. இப்ப கத்​துக்​கிட்டு இருக்​கேன்.

Q

அடுத்து என்​னென்ன படங்​கள் பண்​றீங்க?

A

எஸ்​.ஜே.சூர்யா இயக்கி நடிக்​கும் ‘கில்​லர்’, அஜித்​தோட ‘டேர்​டெ​வில்’, தெலுங்​குல தேஜா சஜ்ஜா நடிப்​பில் ‘ஜோம்பி ரெட்​டி- பார்ட் 2’ படங்​கள்​ பண்​ணிட்​டு இருக்​கேன்​. இந்​தி​யில பண்​ண​வும்​ பேச்​சு​வார்​த்​தை போயிட்டிருக்கு.

“கதையும் உணர்ச்சிகளும் மொழிக்கு அப்பாற்பட்டவை” - படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி நேர்காணல்
சர்தார் 2: விமர்சனம் - ஸ்பை த்ரில்லரா, குளறுபடி கில்லரா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in