

ஆர்.ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஃபேன்டஸி திரைப்படமான ‘ட்ரோன்ஸ்’ அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜிஎம் மோர்கன் பிலிம்ஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் இந்தத் தகவலை பகிரந்துள்ளது. அந்தப் பதிவில், ‘ஒரு பித்துக்குளி படை, ஒரு கற்பனை உலகம், முடிவில்லா பொழுதுபோக்கு. ‘ட்ரோன்ஸ்’ அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது’ எனத் தெரிவித்துள்ளது.
சர்ரியலிஸ்ட் ஃபேன்டஸி பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், சித்தி இட்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, பரிதாபங்கள் டிராவிட் செல்வம், குரேஷி உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஜிஎம் மோர்கன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படத்துக்கு ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஹரி எஸ்.ஆர். இசை அமைத்துள்ளார்.