கற்பனை உலகில் பயணிக்கும் கதை ‘ட்ரோன்ஸ்’

கற்பனை உலகில் பயணிக்கும் கதை ‘ட்ரோன்ஸ்’
Updated on
1 min read

சித்தி இட்​னானி, அஞ்​சலி நாயர், தேவதர்​ஷினி, பரி​தாபங்​கள் டிரா​விட் செல்​வம், குரேஷி உள்பட பலர் நடித்​துள்ள திரைப்​படம் ‘ட்ரோன்ஸ்’.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு ஹரி எஸ்​.ஆர்​. இசை அமைத்​துள்​ளார். ஜிஎம் மோர்​கன் பிலிம்ஸ் நிறு​வனம் தயாரித்​துள்ள இப்​படத்தை ஆர்​.​ராகவ் மிர்தாத் இயக்​கி​யுள்​ளார். இப்​படத்தை ஃபைவ் ஸ்டார் செந்​தில் இந்​தி​யா​வில் வெளி​யிடு​கிறார். வித்​தி​யாச​மான ஃபேன்​டஸி திரைப்​பட​மான இதன் ஃபர்​ஸ்ட் லுக் போஸ்​டர்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

“கனவு​களில் மட்​டுமே நிகழக்​கூடிய விசித்​திர​மான சம்​பவங்​கள், நிஜ உலகில் நடந்​தால் எப்​படி இருக்​கும் என்ற கேள்​வியை மையமாகக் கொண்டு இப்​படத்​தின் திரைக்​கதை அமைக்கப்பட்டுள்ளது.

புதி​ரான சம்​பவங்​கள் நிறைந்த கற்​பனை உலகில் பயணிக்​கும் வகை​யில், தமிழ் சினி​மா​வில் அரி​தாக முயற்​சிக்​கப்​படும் சர்​ரியலிஸ்ட் ஃபேன்​டஸி பாணி​யில் இப்​படம் உரு​வாகி​யுள்​ளது. இப்​போது இறு​திக்​கட்ட பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன” என படக்குழு தெரி​வித்​துள்​ளது.

கற்பனை உலகில் பயணிக்கும் கதை ‘ட்ரோன்ஸ்’
‘சர்தார் 2’ முதல் ‘மண்டாடி’ வரை - இந்த வார தியேட்டர் ரிலீஸ் பட்டியல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in