

மோகன். ஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘திரவுபதி’. இதில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார், கருணாஸ் உள்பட பலர் நடித்திருந்தனர். இதன் அடுத்த பாகமாக ‘திரவுபதி 2’ படத்தை மோகன் ஜி இப்போது இயக்கியுள்ளார்.
இதில் ரிச்சர்ட் ரிஷி, ரக் ஷனா இந்துசுதன், நட்டி நடராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா என பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ள இப்படத்தை நேதாஜி புரொடக் ஷன்ஸ், சோழ சக்ரவர்த்தி மற்றும் ஜி.எம்.ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரித்துள்ளது.
இந்தப் படம் ஜன.23-ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டது. இந்நிலையில் பொங்கலன்று வெளியாக இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இயக்குநர் மோகன் ஜி வெளியிட்டுள்ள பதிவில், “திரவுபதி 2 திரைப்படம் நமது மண்ணின் வரலாறு. அதை இந்தத் தலைமுறை அறியும் வகையில் திரையில் பதிவு செய்துள்ளோம். இந்தப் பொங்கல் நாளில் மூன்றாவது வீர வல்லாள மகாராஜாவும் வீர சிம்ம காட வராயரும் வெள்ளித்திரையில் ஒன்றாக வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.