

விஜய் மில்டன் இயக்கத்தில் ராஜ் தருண், பரத், ஆரி அர்ஜுனன், சுனில் ஷெட்டி, ராதா ரவி, கிஷோர், பால் டப்பா, அம்மு அபிராமி, பரத் சீனி உள்பட பலர் நடித்துள்ள படத்துக்கு ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
ரஃப்நோட் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார். அதிரடி ஆக் ஷன், சென்டிமென்ட்டுடன் எளிய மனிதர்களின் கதையைச் சொல்லும் இப்படத்தின் டிரெய்லரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். இது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு விரைவில் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.