

இயக்குநர் சசியும், விஜய் ஆண்டனியும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம், ‘நூறு சாமி'. சுவாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 19-ல் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குநர் சசி, செய்தியாளர்களிடம் பேசும்போது, “ 'பிச்சைக்காரன்' படத்தின் நாயகன், தாயைத் தெய்வமாக மதித்தான். தாயை மனுஷியாக பார்க்கத் தொடங்கிய படம் 'நூறு சாமி'. இந்தப்படத்தின் முக்கிய அம்சங்களாக சுவாசிகாவின் அற்புத நடிப்பும், விஜய் ஆண்டனியின் வித்தியாச நடிப்பும் பேசப்படும்.
ஒரு நடிகராக இன்னும் பல மடங்கு மெருகேறியிருக்கிறார் அவர். கிராமத்து மனிதனாக வாழ்ந்திருக்கிறார். சுவாசிகாவும் அருமையான பங்களிப்பைத் தந்துள்ளார். 'நூறு சாமி' படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக அவர் திகழ்வார். இப்படம் பார்க்கிற அனைவரும் படத்தோடு தங்களைத் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும்” என்றார்.