

பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்தை இயக்கி இருந்தார். இதையடுத்து ரஜினிகாந்த்-கமல் ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது.
பின்னர் அதிலிருந்து விலகிய அவர், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதன் டீஸர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் தனது 7-வது பட வேலைகளைத் தொடங்கியுள்ளார்.
தன்னுடைய உதவியாளர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை, அவருடன் பணியாற்றும் துணை இயக்குநர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதில் ‘எல்கே -7 அணி’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் என்ன படம் என்பதைக் குறிப்பிடவில்லை. இதனால் ‘கைதி 2’ படமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.