இந்தப் பிரச்சார உத்தி சரிதானா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் கேள்வி

இந்தப் பிரச்சார உத்தி சரிதானா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் கேள்வி
Updated on
1 min read

தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார உத்தியை கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் சேரன்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தை முன்வைத்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகியுள்ளன. சில தவெக வேட்பாளர்கள் விஜய்யை போன்று ஒரு பொம்மையை உருவாக்கி அதை வைத்து பிரச்சாரம் செய்துள்ளனர். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை உருவாக்கியது.

இந்த வீடியோ பதிவினை குறிப்பிட்டு இயக்குநர் சேரன், “ஒரு தலைவர் சந்திக்கும் முதல் தேர்தல், இந்த பரப்புரை நிலை சரிதானா, இந்நேரம் அந்த தலைவர் அனைத்து தொகுதிகளையும் பம்பரமாக சுற்றியிருக்க வேண்டாமா. அதை விடுத்து திருவிழாவில் போட்டோ எடுக்க நடிகர்கள் கட் அவுட் வைத்திருப்பது போல் விஜய்யின் டூப் வேனில் வருவது எவ்வளவு பெரிய அவமானம் அந்த தலைமைக்கு.

நாளை சட்டசபைக்குள் இப்படி எத்தனை பேர் அமர போகிறார்கள் தினமும். நான்கு தேர்தல்களை சந்தித்து தொடர் தோல்வியை சந்தித்த போதும் தளராமல் ஒரு மனிதன் தன் கொள்கைக்காக கட்சிக்காக மக்கள் மாறுவார்கள் என நம்பிக்கை வைத்து, கொட்டும் மழையிலும் நிறுத்தாமல் பிரச்சாரம் செய்கிறார். அந்த தலைவன் எங்கே, முதல் தேர்தலிலேயே தனக்கு பதிலாக டூப்பை பயன்படுத்த அனுமதி தரும் தலைமை எங்கே. சிந்தியுங்கள் மக்களே.

நீங்கள் யார் வேண்டுமா வேண்டாமா எனக்கேட்ட ஐயா ஸ்டாலின் அவர்களே இந்த வயதில் இறங்கி நடந்து பிரசச்சாரம் செய்கிறார். ஆனால் நீங்கள் ஒரு மணி நேரம் தான் அனுமதி என காரணம் சொல்லி பிரச்சாரத்தை ரத்து செய்கிறீர்கள். இப்போ சொல்லுங்க மக்களே.. நிஜப்போட்டி திமுக Vs நாதக தானே” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன்.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இயக்குநர் சேரன் பல்வேறு கருத்துகளை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிரச்சார உத்தி சரிதானா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் கேள்வி
அல்லு அர்ஜுன் – அட்லி இணையும் ‘ராக்கா’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in