தனுஷின் ‘ஓம்’ படம் நவ.20-ல் ரிலீஸ்

தனுஷின் ‘ஓம்’ படம் நவ.20-ல் ரிலீஸ்
Updated on: 
1 min read

தனுஷ் - மம்முட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓம்’ படம் நவம்பர் 20-ம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒண்​டர்​பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் தனுஷின் 55-வது படம் ‘ஓம்: சாப்டர் 1’. இந்தப்  படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். எழிலரசு ஒளிப்​ப​திவு செய்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில், தனுஷ், மம்முட்டியுடன் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அக்டோபரில் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படம் வெளியாக இருப்பதால் தனது ‘ஓம்’ பட வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தனுஷ் அறிவித்திருந்தார். அதேபோல் சூர்யாவின் ‘சீன்’ படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதால், தன்னுடைய படம் தீபாவளிக்கும் வெளியாகாது எனத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர், “சினிமா துறையின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு, பெரிய திரைப்படங்கள் புரிதலுடன் ஒவ்வொருவரின் முடிவுகளை மதித்து நடக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். விரைவில் ‘ஓம்’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ‘ஓம்’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆர் டேக் ஸ்டூடியோஸ் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளது.

மம்முட்டி மற்றும் தனுஷ் துப்பாக்கியுடன் இருக்கும் போஸ்டரை வெளியிட்டு அந்தப் பதிவில், ‘இறுதி தாக்குதலுக்கான நாள் நெருங்கிவிட்டது. ‘ஓம்’ திரைப்படம் 2026 நவம்பர் 26 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது’ எனத் தெரிவித்துள்ளது.

தனுஷின் ‘ஓம்’ படம் நவ.20-ல் ரிலீஸ்
Dorothy: சாதி, ஆண் திமிர் வளர்த்த பாலின பாகுபாட்டை தகர்த்த டோரதி | திரை தேவதைகள் 38

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in