

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் வி.ஜே.சித்து இயக்கி நடிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல யூடியூபரான வி.ஜே.சித்து இயக்குநராக அறிமுகமாகி நடிக்கும் படம் ‘டயங்கரம்’. இந்தப் படத்தில் அவருடன் நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், 'ஆதித்யா' கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பி.தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்துக்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ.ராகவ் மேற்கொண்டுள்ளார். ஆடை வடிவமைப்பாளராக ஏ.கீர்த்தி வாசன் பணியாற்றி உள்ளார்.
கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கிய ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து படக்குழுவினர் கூறுகையில், ‘இன்றைய இளைஞர்களின் துடிப்பான ஆற்றல், காமெடி, எமோஷன் மற்றும் சுய அடையாளத்தை கண்டுபிடிக்கும் பயணம் ஆகியவற்றை மையப்படுத்திய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக 'டயங்கரம்' உருவாகியுள்ளது.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் டீசர், இசை மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்’ என தெரிவித்துள்ளனர்.