‘ரி​வால்​வர் ரீட்​டா’ டார்க் காமெடி படம்: கீர்த்தி சுரேஷ்

‘ரி​வால்​வர் ரீட்​டா’ டார்க் காமெடி படம்: கீர்த்தி சுரேஷ்

Published on

‘நவீன சரஸ்​வதி சபதம்’ படத்​துக்​குப் பிறகு இயக்​குநர் சந்​துரு இயக்​கி​யுள்ள படம், ‘ரி​வால்​வர் ரீட்​டா’. கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்​திரத்​தில் நடித்​துள்​ளார்.

ராதிகா சரத்​கு​மார், சூப்​பர் சுப்​ப​ராயன், சுனில், அஜய் கோஷ், ரெடின் கிங்​ஸ்​லி, ஜான் விஜய், கல்​யாண் மாஸ்​டர், சுரேஷ் சக்​ர​வர்த்தி உள்பட பலர் இணைந்து நடித்​துள்​ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படம் இன்று (நவ.27) வெளி​யாகிறது. இதன் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடந்​தது.

நடிகை கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “இயக்​குநர் சந்​துரு முதல் நாள் கதை சொன்​ன​போதே பயங்​கர​மாகச் சிரித்து மகிழ்ந்​தேன். படப்​பிடிப்​பின்​போது அவர் கோபப்​பட்டு நான் பார்த்​ததே இல்ல. அவ்வளவு அன்​பானவர். ரீட்டா கதா​பாத்​திரத்​துக்கு என்​னைத் தேர்ந்​தெடுத்​தற்கு நன்​றி. ராதிகா மேட​முடன் முதல்​முறை​யாக நடிக்​கிறேன்.

அவர் தயாரித்த ‘இது என்ன மாயம்’ படம் மூல​மாகத்​தான் தமிழில் அறி​முக​மானேன். இந்​தப் படத்​தில் அவருடன் நடித்த காட்​சிகளை எல்​லோரும் ரசிப்​பீர்​கள். எங்​கள் கெமிஸ்ட்ரி மிக​வும் நன்​றாக இருக்​கும். இது, ஒரு டார்க் காமெடி படம்” என்​றார். படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in