ஜோடி பொருத்​தம் பற்றி பேசும் ‘கோ​யம்​பத்​தூர் மாப்​பிள்​ளை’!

ஜோடி பொருத்​தம் பற்றி பேசும் ‘கோ​யம்​பத்​தூர் மாப்​பிள்​ளை’!
Updated on
1 min read

‘நாய் சேகர்’ திரைப்​படத்தை இயக்​கிய கிஷோர் ராஜ்கு​மார், எழுதி இயக்​கி, நாயக​னாக நடிக்​கும் படத்​துக்கு ‘கோ​யம்​பத்​தூர் மாப்​பிள்​ளை’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர்.

இதில் ‘கொட்​டுக்காளி’ படத்​தில் நடித்த மலை​யாள நடிகை‌ அன்னா பென் நாயகி​யாக நடிக்​கிறார். நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறு​வனம் சார்​பில் கார்த்​திக் நி​வாஸ், மகாவீர் அசோக் இப்​படத்தை தயாரிக்​கின்​றனர். இதன் படப்​பிடிப்பு சமீபத்​தில் நிறைவடைந்​தது.

இந்​நிலை​யில் இப்​படத்​தின் முதல் பார்​வையை, இயக்​குநர் லோகேஷ் கனக​ராஜ் நேற்று வெளி​யிட்டு படக்​குழுவை பாராட்​டி​னார். படம் பற்றி கிஷோர் ராஜ்கு​மார் கூறும்​போது, “காதலும் நகைச்​சுவை​யும் நிரம்​பிய‌ கதை இது. ஃபீல் குட் உணர்வை தரும் வகை​யில் திரைக்​கதை வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. ஜோடி பொருத்​தம் குறித்து பேசும் இந்​தப் படம் நாயகிக்கு முக்​கி​யத்​து​வம் தரும் வகை​யில் இருக்​கும்​” என்​றார்​.

ஜோடி பொருத்​தம் பற்றி பேசும் ‘கோ​யம்​பத்​தூர் மாப்​பிள்​ளை’!
‘மூன்வாக்’ பட ‘ஏத்து’ பாடலுக்கு ஆப்பிரிக்க இசைக்குழு நடனம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in