எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு கலைத் துறை வித்தகர் விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு கலைத் துறை வித்தகர் விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
Updated on
1 min read

பழம்​பெரும் நடிகை எம்​.என்​.​ராஜம் மறறும் மூத்த திரைப்பட இய்க்​குநர் எஸ்​.பி.​முத்​து​ராமன் ஆகியோ​ருக்கு கலைஞர் நினைவு கலைத்​துறை வித்தகர் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்​கி​னார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: செய்தி மக்​கள் தொடர்​புத் துறை சார்​பில், தமிழ்த் திரையுல​கில் சிறந்து விளங்​கிடும் வாழ்​நாள் சாதனையாளர்​களைப் பாராட்​டும் வகை​யில் ‘கலைஞர் நினைவு கலைத்​துறை வித்​தகர் விருது’ ஆண்​டு​தோறும் வழங்​கப்​படும் என்றும், விரு​தாளர்​களுக்கு ரூ.10 லட்​சம், நினை​வுப் பரிசு வழங்​கப்​படும் என்​றும் அறிவிக்கப்பட்டது.

அதன்​படி, 2024-ம் ஆண்​டுக்​கான விருது பழம்​பெரும் நடிககை​களில் ஒரு​வ​ரான எம்​.என்​.​ராஜத்​துக்கு முதல்​வர் ஸ்டா​லின் நேற்று வழங்​கி​னார். 2025-ம் ஆண்​டுக்​கான கலைத்​துறை வித்​தகர் விருதை திரைப்பட இயக்​குநர் எஸ்.பி.​முத்​து​ராமனுக்கு முதல்​வர் வழங்​கி​னார். இருவருக்கும் விருதுடன் ரொக்​கப் பரி​சாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. இரு​வரும் முதல்​வருக்கு நன்றி தெரி​வித்​துக் கொண்டனர்.

நிகழ்​வில், அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன், தலை​மைச்​செயலர் நா.​முரு​கானந்​தம், செய்​தித்​துறை செயலர் வே.​ராஜா​ராமன், தமிழ்​வளர்ச்​சித்​துறை செயலர் இரா.​வைத்திநாதன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in