‘சின்ன சின்ன ஆசை’​யில் காசியில் நடக்​கும் கதை

‘சின்ன சின்ன ஆசை’​யில் காசியில் நடக்​கும் கதை
Updated on
1 min read

இந்​திரன்​ஸ், மது​பாலா, அபர்ணா பால​முரளி நடிப்​பில் உரு​வாகி இருக்​கும் திரைப்​படம்​ ’சின்ன சின்ன ஆசை’. தம்பி ராமை​யா, காளி வெங்​கட் முக்கிய​மான வேடங்​களில் நடித்​துள்​ளனர்.

கோவிந்த் வசந்தா இசையமைத்​துள்ள இப்​படம் தமிழ், மலையாளம், தெலுங்​கு, கன்னட மொழிகளில் ஜூன் 19-ல் வெளியாகிறது. பாபுஜி புரொடக் ஷன்ஸ் சார்​பில் அபிஜித் பாபுஜி தயாரித்​துள்ள இப்​படத்தை வர்ஷா வாசுதேவ் இயக்​கி​யுள்​ளார். தமிழில் ஏஜிஎஸ் சினி​மாஸ் வெளி​யிடு​கிறது.

“காசி நகரில் எதிர்​பாராதவித​மாகச் சந்​திக்​கும் ஓர் ஆணுக்​கும் பெண்​ணுக்​கும் இடையே நிகழும் தருணங்​களை உணர்​வுப்​பூர்வமாகச் சொல்லும் படம் இது.

மனிதர்​களுக்​குள் இருக்​கும் சொல்​லப்படாத சின்ன சின்ன ஆசைகள் ஏராளம். அந்த நுண்​ணிய உணர்​வு​களை அவற்​றின் சாரம் மாறாமல் திரை​யில் கொண்டு வரும் முயற்​சியே இப்​படம்” என்று படக்​குழு கூறி​யுள்​ளது.

‘சின்ன சின்ன ஆசை’​யில் காசியில் நடக்​கும் கதை
Maa Behen: சமூகம் உருவாக்கிய ‘சூனியக்காரிகள்’ ரேகா, ஜெயா, சுஷ்மா | திரை தேவதைகள் 21
‘சின்ன சின்ன ஆசை’​யில் காசியில் நடக்​கும் கதை
தமிழக சிறைத் துறையில் பணியிட மாற்றங்களை முறைப்படுத்த புதிய வாரியம் அமைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in